நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் -- அன்புடன் இரெ. குமரன்.
செவ்வாய், 31 டிசம்பர், 2019
வியாழன், 12 டிசம்பர், 2019
முப்பத்திரண்டு
ஓமாலிகையாவன –
” இலவங்கம் பச்சிலை கச்சோலம் ஏலம்
குலவிய நாகனங் கொட்டம் – நிலவிய
நாகமதா வரிசி தக்கோலம் நன்னாரி
வேகமில் வெண்கோட்டம் மேவுசீர்
போகாத கத்தூரி வேரி யிலாமிச்சம் கண்டில்வெண்ணெய்
ஒத்தகடு நெல்லி உயர்தான்றி துத்தமொடு
வண்ணக் கச்சோலம் அரேணுக மாஞ்சியுடன்
எண்ணும் சயிலேக மின்புழுகு - கண்ணுநறும்
புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம்
பின்னு தமாலம் பெருவகுளம் – பன்னும்
பதுமுகம் நுண்ணேலம் பைங்கொடு வேரி
கதிர்நகையா
யோமாலிகை “ என்னுமிவை.
( 32 ஓமாலிகை, அகராதியிலும் பொருள் காண்டல் அரிதாயிற்று – மூலிகை ஆய்வாளர்களிடத்துப் பொருள் அறிந்து கொள்க. )
செவ்வாய், 10 டிசம்பர், 2019
மூடநம்பிக்கைகளில் முற்றித்திரண்ட மூளையில்
எழுத்தாணியை இறக்கிய திருவள்ளுவர்...!
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையான் காணப் படும். –--- ௨௯அ
உள்ளுக்குள்
நிறைந்த அழுக்கை
(கொலை, களவு, காமம்….)
வைத்துக்கொண்டு, குளித்து மூழ்கிப் பூசுவன பூசுவதால்
மட்டும் ஒருவன் தூய்மை உடையவனாக முடியாது ; அப்பழுக்கற்றவன், உண்மையைப் பேசும் உயர் குணத்தால் மட்டுமே அறியப்படுவான்.
புற
அழுக்கை நீரால் கழுவு
; அக அழுக்கை வாய்மையால் கழுவு.
“ எய்திய செல்வத்தார் ஆயினும் கீழ்களைச்
செய் தொழிலால் காணப்படும்.” ---நாலடியார்.
எவ்வளவுதான்
செல்வம் பெற்றவராயிருந்தாலும் செய்யும் தொழில்களைக் கொண்டு அவர்கள் கீழ் மக்களே என்பதைத்
தெரிந்து கொள்ளலாம்.
திங்கள், 9 டிசம்பர், 2019
ஞாயிறு, 8 டிசம்பர், 2019
”ஓங்கு பரிபாடல்”
”ஓங்கு பரிபாடல்” – இது தமிழ்
மொழிக்கே சிறப்புரிமையாகப் பெற்ற அகப் பொருள் – புறப் பொருள்
ஆகிய இருபொருள்களையும் தழுவிப்
புலமைச் சான்றோரால் ஆக்கப்பட்ட செவ்விய நூலாகும்.
இந்நூல் முழுமுதற்
கடவுளராகிய திருமாலையும் செவ்வேளாகிய
முருகப்பெருமானையும் உலகு புரந்தூட்டும் உயரிய ஒழுகலாற்றைக் கொண்ட , வையைப் பேரியாற்றையும் வாழ்த்துதலாக
உட்பொருள் கொண்டு இடையிடையே நம் தமிழகப் பண்பு ,அன்பு ,காதல், வீரம் , அறம்,
காவிய ஓவியத் திறங்களை விளக்கிச் செல்லும் பெருமை மிக்கது. அந் நூற்பாடல்களுள் நம் தமிழ் மாநிலத்துச் சிதைந்தன போக எஞ்சிய ( 22 ) பாடல்களே இன்றுகாறும் நம்மிடையே நின்று நிலவுகின்றன.
“பரிபாடலில் முருக வணக்கம் என்னும் கட்டுரை, பரிபாடல் கூறுகிற
முருக வழிபாடு, உலக இன்ப
வாழ்க்கையைப் பெறுவதற்காகவே மக்கள் முருகனை வழிபட்டனர், வீடு பேற்றை
(முத்தியை)க் கருதி மக்கள் வழிபடவில்லை என்பதையும் அக்காலத்தில் முருகன் வீடுபேறு அளிக்கிற தெய்வமாகக் கருதப்படவில்லை என்பதையும் கூறுகிறது.”
– மயிலை சீனி. வேங்கடசாமி, (அணிந்துரை, பேராசிரியர் நா. வானமாமலை, தமிழர்பண்பாடும் தத்துவமும் –)
சனி, 7 டிசம்பர், 2019
மணி மகுடம்
மணி மகுடம்
பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
…………………………………
காதல் தானும் கடலினும் பெரிதே.
……………….. நற். 166.
இப்பாடலை
இயற்றிய புலவரின் பெயர் தெரியவில்லை. சொற்சுவையும் பொருட் சுவையும்
மலிந்து காதல் சிறப்புரைக்கும்பாடலாகத் திகழ்கிறது.
“ இனி இச்செய்யுட்கு ஒப்பான சிறந்த செய்யுள் கிடைத்தல்
அரிது: தமிழ் இலக்கியத்தின் மணிமுடியாக இதனைக் கொள்ளலாம்
“ என்கிறார் உரையாசிரியர் பொ. வே. சோமசுந்தரனார்.
பத்து
அடிகளைக் கொண்ட இப்பாடல்- முதல் ஐந்து அடிகளில் தலைவனுக்குக்
காணுந் தோறும் இன்பம் தரும் தலைவியின் அழகு வருணிக்கப் படுகின்றது’; எஞ்சிய ஐந்து அடிகள் பொருளினும் காதலே சிறந்தது எனக் கூறித் தலைவன் ”பிரியேன்” எனக் கூறுதலை விளக்குகின்றன.
செவ்வாய், 3 டிசம்பர், 2019
நன்றி கலந்த வணக்கம்.
உலகத் தமிழ் ஆர்வலர்களின் அன்புக்குத் தமிழ் வணக்கம். மீண்டும் சந்திப்போம்.. நன்றியுடன்....முனைவர் இரெ.குமரன்.
சனி, 30 நவம்பர், 2019
தொல்தமிழர் அறிவியல் –157 : 50. உலகத் தோற்றம் - ஒடுக்கம்
தொல்தமிழர் அறிவியல் –157 :
50. உலகத் தோற்றம் - ஒடுக்கம்
Birth
and Death of the world
“ The quotation from Paripadal, a literary work of the Sangam age refers
to about five eons that occur in the universe in a succession. Such drastic and
devastating occurrences happen when the
sun, moon and the sky get collapsed due to geophysical reasons. Then after a
very long gap of time in the post-aeon period appears the vast expanse of sky
in the first eon a mass of whiff in the second, fire in the third, snow and
rain in the fourth and at length appears the mass of temporal earth. This is
how the universe with its earth and sky arises, says the Tamil poet.
When
excessive rain and snow submerge the earth, at one stage, the submerged earth
itself emerges to enable all types of beings to grow on the earth. In the
absence of any technical reasons for all these massive changes and biological
growth, the Poet attributes it to the activities of God Thirumal alias Vishnu
who is the sustainer of the world according to Hindu mythology.
Barring this reference to
mythology, what all the Tamil Poet says such as eon, deluge and global
devastation are all true. The Pyramids in Japan, Dwaraka city in India, Lion
city of Quiandao Lake in China,
Cleopatra’s palace in Alexandria were once glorious historical places but now
they are all submerged.
In a
recent under-water survey a small city in an area of about 50 acres is
discovered in the sea-bed of Mediterranean sea near Tunisia. Researchers
assumes that this sub-merged place must have been an extinct Neopolis city of the 4th century A.D. It may be
recalled that in a tsunami that raged in July 365 A.D., the whole of Alexandria in Egypt submerged. Poompukar in
Tamil Nadu may also added into this list.
As on date, because or
global warming the huge mass of ice in polar regions is getting melted and hence large number of
coastal cities such as Madras, Bombay, small south Pacific islands and Male are
likely to be submerged by sea, it is said.
These
facts justify what the Sangam poet said once about the life and death of the
geologically vulnerable parts of the world at large.
References:
Wikipedia
Viduthalai,dt. 05-09-2017.--- –Editor.
தொல்தமிழர்
அறிவியல்
முற்றும்.
வெள்ளி, 29 நவம்பர், 2019
தொல்தமிழர் அறிவியல் –156 : 50. உலகத் தோற்றம் - ஒடுக்கம்
இந்தச் சுருக்கவிவரம் இல்லை. இடுகையைப் பார்க்க,
இங்கே கிளிக் செய்க .
வியாழன், 28 நவம்பர், 2019
தொல்தமிழர் அறிவியல் –155 : 50. உலகத் தோற்றம் - ஒடுக்கம்
தொல்தமிழர் அறிவியல் –155 : 50. உலகத் தோற்றம் - ஒடுக்கம்
50. உலகத் தோற்றம் - ஒடுக்கம்
தொன்முறை இயற்கையின் மதியொ……….
………………………… மரபிற் றாக
பசும்பொன் உலகமும் மண்ணும்
பாழ்பட
விசும்பில் ஊழி ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்து இசையிற் றோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்துவளி கிளர்ந்த ஊழூ ழூழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல்
தலைஇய ஊழியும் அவையிற்று
உண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடுயர்பு ஈண்டி யவற்றிற்கும்
உள்ளீடாகிய
இருநிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும் ஆம்பலும்
சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி யீட்டம் கழிப்பிய
வழிமுறை
--கீரந்தையார் . பரிபா. 2 : 1 – 15
ஒன்றற்கொன்று
மாறிவரும் இயல்புடைய திங்களும் ஞாயிறும் கெட்டு – விண்ணுலகமும் வெறும் பாழாகி விடப் பின்னர் – வானமும் கெட்டு இல்லையாகச் சிதைந்து ஒடுங்கிய ஊழிக் காலங்கள் பற்பல – முறைமுறையாகக் கழிந்தன –
அவ்வூழிகளின் பின்னர் – அப்பாழினின்றும் வானம் தோன்றிய முதற் பூதத்தின் ஊழியும் – அவ்வானத்தினின்றும் காற்றுத் தோன்றிக் கிளர்ந்து வீசி நிற்கும் இரண்டாம் பூதத்தின் ஊழியும் – அந்தக் காற்றினின்றும் தீத் தோன்றிச் சுடர் வீசிய மூன்றாம் ஊழியும் – அந்தத் தீயினின்றும் பனியும் மழையும் தோன்றிப் பெய்த நான்காம் பூதத்தின் ஊழியும் –
ஒடுங்கும் காலத்தே நீரினுள் முழுகி ஒடுங்கிய பெரிய நிலமாகிய ஐந்தாம் பூதம் மீண்டும் அவ்வெள்ளத்தினூடே பீடு பெற்றுத் திரண்டு செறிந்த ஐந்தாம் ஊழியும் – பற்பல எண்ணிறந்தனவாகக் கழிந்த பின்னர் – இந்நிலத்தின் கண்ணே உயிர்கள் தோன்றும் பொருட்டுத் திருமாலே நீ பன்றி உருவம் கொண்டு நீரினுள் முழுகிக் கிடந்த நிலத்தினை மேலே கொணர்ந்தாய்.
விளக்கம்:
இப்பாடலின் முதல் நான்கு அடிகளில் உலகத்தின் ஒடுக்க முறை கூறப்படுகின்றது. பாடலில் அழிந்து போன சொற்றொடர் “ ஞாயிறும் கெடுதலால் அழகிழந்து “ என்னும் பொருளுடையது என்பார் பரிமேலழகர்.
தொல் முறை – தொன்றுதொட்டு நிகழும் முறைமை . உலகம் ஒடுங்குங்கால் – நிலம் நீரினுள் ஒடுங்க ; நீர் தீயினுள் ஒடுங்க ; தீ காற்றினுள் ஒடுங்க ; காற்று வானத்தில் ஒடுங்க ; வானம் பிரகிருதியில்
ஒடுங்க இம்முறையே ஊழிகள் பலவும் கழிய என்பார்.
உலகம் ஒடுங்குங்கால் திங்கள் மண்டிலமும் ஞாயிற்று மண்டிலமும் ஒளி இழந்து துகளாகி வான வெளியிலே சிதறிப் போக - நிலம் முதலிய உலகங்கள் பின்னர்ச் சத்தி கெட்டு நொறுங்கித் துகள்பட்டு ஒழியும்.
அறிவியல் நோக்கு
“ Antarctica’s ice to melt if all fossil fuel is burned “ –
A subsequent sea level rise of 200 feet will see London. Paris. NewYork.Hong
Kong and Tokyo being submerged. ….. Dr. Caldeira said “ To melt all of
Antarctica I thought it would take something like 10000 years.” – Times of
India 13/9/15 – P 12.
இவ்வறிவியல் உண்மையால் நீரால் உலகம் அழியும் என்பதும் – அப்படி அழிந்தும் இருக்கிறது என்பதும் – இத்தகைய அழிவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் என்பதும் –அக்கால அளவைத்
தொல் ஊழி – பல் ஊழி எனப் பல்லாயிரம் ஆண்டுகளைக் கொண்ட காலத்தை ஊழி என்று சுட்டியதும் தமிழ்ச் சான்றோரின் அறிவியல் புலமைக்குச் சான்று
Mind Blowing Underwater Cities---------தொடரும்…புதன், 27 நவம்பர், 2019
தொல்தமிழர் அறிவியல் –154 : 49. சூரியன் பூமியை விழுங்கும்
தொல்தமிழர் அறிவியல் –154 : 49. சூரியன் பூமியை
விழுங்கும்
The
authors of the study followed the changes in lake temperatures from 1985 to
2009. They also found that certain lakes cooled during this time, which may
have been caused by changes in the surrounding ecosystem – for example,
allowing the forest to regrow around a lake could result in a net decrease in
temperature.
Global Warming
Will Destroy The Earth In The End
CONTRIBUTOR
In
other words, at some point, the Sun will become so hot that the Earth's oceans will boil.
This is the ultimate form of global warming: a world so hot that water is
impossible. At this point, life on our planet's surface will be rendered
impossible, although some clever species may make a new home in Earth's
(cooler) upper atmosphere………………..
………………………………
Global warming will destroy life on Earth in the end: not just human
life, but all life on the planet's surface, including in the seas. A billion or
two years from now, long before the Sun becomes a red giant and starts fusing
helium, the temperatures on our world will rise too high for plants, animals or
any creatures we know to survive. Perhaps we're incredibly fortunate that life
took the path it did to lead to us; if the Cambrian explosion or the workings
of biological evolution were just a little bit slower, intelligent life like us
may have never had the time to arise.
Astrophysicist and author Ethan Siegel is the founder and primary
writer of Starts With A Bang! Check out his first book, Beyond The Galaxy, and look for his second, Treknology, this October!
நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி சூரியன் பூமியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. [34] சில இயற்பியல் விதிமுறைகளின் படி பூமி சூரியனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் பூமியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்று பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சூரியனின் வெப்பம் 10% அதிகமாகிறது. [34][35] –விக்கிபீடியா.
The sun will swallow the Earth
“Astronomers
observe that the sun slowly but surely gets enlarged and its radius will grow
into 250 times larger than what it is. This means that one day or other in
future, the earth is most likely to be swallowed by the sun. It is also
informed that a fiery heat of the sun gets ten percent increased in every
billion of years. Such a climate change is bound to render the lakes of the
world dry. It will be the global mortality of all living beings. Due to on
excessive heat of the sun, surface water all over the world will be evaporated
and that will be the end of all the biological beings.
This what exactly a
Sangam Poet Mamoolanar in Akananooru(31) foretells in the quotation noted
above. The fact that tha sun is also a planet and a number of other planetary
bodies revolve around the sun was not unknown to the ancient Tamil Poets.” –Editor.----தொடரும்.....