ஞாயிறு, 31 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –358. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –358. .கன்னி முத்தம்....!

……………….18………………

அழியா உலகில்

அழியும் உயிரே

நீர்க்குமிழி போலும்

வாழ்க்கை

நின்றதா நெடியதா

அறிவார் யாரே?

நாளையே வரும்

நரையும் திரையும்

வாதம் வாட்டும்

கபம் கட்டும்

விழுது நெய்போல்

கோழை வழியும்

ஊன்றுகோல் ஒன்று கொண்டு

நடக்கும் நடை தளரும்

சேர்த்து வைத்த

செல்வம் சிதறும்

கண்வலைப்பட்ட

காமக் கன்னியர்

கழுத்தைச் சுற்றிய

பாம்பாய்த் தோன்றுவர்

எலும்பும் தோலும்

எண்சாண் உடம்பாகும்

எனவே

இளமை கழியும் முன்னே

இன்பம் பெறுவாய் மனமே..!

---களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

வியாழன், 21 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –357. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –357. .கன்னி முத்தம்....!

……………….17………………

அன்பே உன்னிடம் 

கண்டதும் உண்டதும்

கொண்டதும் கொடுத்ததும்

கணக்கில் வருமோ?

இருட்டில் எழுதிய

இந்தக் கணக்கு

கணக்கில் வாராக்

கள்ளக் கணக்கு …!

---களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995

திங்கள், 18 அக்டோபர், 2021

திருக்குறள் சிறப்புரை- அறிமுகவுரை

 இன்றைய தினமணி நாளிதழில் திருக்குறள் - சிறப்புரை ; அறிமுகவுரை

ஆசிரியருக்கு நன்றி...!


சனி, 16 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –356. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –356. .கன்னி முத்தம்....!

……………….16………………

கண்ணே……

நீயும் பொய்

நானும் பொய்

நித்திய வாழ்வை

அநித்தியம் எனச்

சொன்னதும் பொய்!

நீயும் உண்மை

நானும் உண்மை

இணைந்தே இருப்பது

இறைவனுக்கும் பெருமை.

---களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995 

செவ்வாய், 12 அக்டோபர், 2021

 திருக்குறள் சிறப்புரை...


ஞாயிறு, 10 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –355. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –355. .கன்னி முத்தம்....!

……………….15………………

பருவம் தரும்

பள்ளிப் பாடங்கள்

சொல்லி வருவதில்லை

சொல்லி முடிவதில்லை

என்னென்ன சுகங்கள்

எங்கெங்கே எங்கெங்கே

தேர்வுகள் தினமும்

நடக்கட்டும் சொர்க்கத்தில்...!

---களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995 

வியாழன், 7 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –354. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –354. .கன்னி முத்தம்....!

……………….14………………

காதலர் கணக்கில்

ஒன்றும் ஒன்றும்

இரண்டல்ல

ஒன்றினார் வாழ்க்கை

“ஒன்றே”.

---களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995 

செவ்வாய், 5 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –354. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –354. .கன்னி முத்தம்....!

……………….14………………

பூந்துகில் பூமாலை

சந்தனம் புனுகு

நன்னாரி கத்தூரி

மல்லிகை முல்லை

பைந்தினை செந்தினை

செந்நெல் வெண்ணெல்

கன்னல் சுவையென

பொன்னார் மேனியில்

பொதிந்த இரு கனிகள்

மென்மையும் குளிர்ச்சியும்

மணமும் மதுவும்

நிறைந்து பொலிந்த –நீ

ஊடினாலும்

கூடினாற்போன்ற இன்பமே…!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

திங்கள், 4 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –353. .கன்னி முத்தம்....!

 

தன்னேரிலாத தமிழ் –353. .கன்னி முத்தம்....!

……………….13………………

அண்டவெளியில் நான்

ஆட்சி செய்தேன்

சூரியனும் சந்திரனும்

சொன்னபடி கேட்டார்கள்

தேவரும் அசுரரும்

காவல்,ஏவல் செய்தனர்

ஊர்வசியும் ரம்பையும்

 ஓடி ஒளிந்தனர்

கண்ணே…!

ஓலைக் குடிசைக்குள்

உன்னோடு இருந்தபோது..!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  -

சனி, 2 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –352. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –352. .கன்னி முத்தம்....!

……………….12………………

 

பொன் வேண்டாம்

பொருள் வேண்டாம்

ஆண்டவன் அருள் வேண்டாம்

படியளக்கும் பரமனின்

பாதமும் வேண்டாம்

வேண்டும்…வேண்டும்1

காலமெல்லாம் களித்திருக்க

காதலி நீ வேண்டும்

நினைத்து மகிழ

நீ வேண்டும்

இணைந்து மகிழ

ஆயிரம் இரவுகள் வேண்டும்!

அத்தனை இரவுகளும்

விடியாமல் இருக்க வேண்டும்…!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995 

வெள்ளி, 1 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –351.. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –351.. .கன்னி முத்தம்....!

……………….11………………

உடம்பை உருக்கி

உயிரைச் சுருக்கி

ஊசிமுனையில்

ஒற்றை விரலில்

நின்று தவம் செய்வேன்

என்றும் உனக்காக

கண்ணே…!

கன்னி முத்தம்

தந்தருள்வாய்!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995