வியாழன், 27 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 161 அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 161 அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

அறிவியல் வீழ்ச்சி :

பசுமைப் புரட்சி -  ‘சோழநாடு சோறுடைத்து’ என்னும் சிறப்புக்குரிய காவிரி நிலப்பகுதி இன்று திடலாக்கப்பட்டு வருகின்றது. ஆற்றுக்கரைகளிலும், சாலையோரங்களிலும் இருக்கும் வளமான விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வீடுகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், கலையரங்குகள், தொழிற்சாலைகள் ஆகியன கட்டப்படுகின்றன.

நீர்வளமும்,நிலவளமும் நிறைந்த தமிழ்நாட்டில் ஏரிகளும் குளங்களும் ஆறுகளும் வாய்க்கால்களும் தூர்க்கப்படுகின்றன. இதனால் வேளாண் உற்பத்தி அற்றுப்போகிறது.; சுற்றுச் சூழல் மாசுபடுகின்றது ; வேலை இழப்பும் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகின்றன. விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதால் “பசுமைத் தமிழகம்” பகல் கனவாகிப் போனது.

பசுமைப்புரட்சியின் மூலம் அரிசி உற்பத்தியை 116% அதிகரித்த அற்புதம் 1966இல் துவங்கி 1997இல் முடிந்துவிட்டது.

 

விக்கிபீடியா:

”” இந்தியாவின் பசுமைப் புரட்சி (Green Revolution in India) என்று 1966ஆம் ஆண்டு முதல் இந்திய உணவுத் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. விடுதலை பெற்ற இந்தியா உணவுத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீரிய ஒட்டு விதைகள்மேம்பட்ட உரவகைகள், மேம்பட்ட வேளாண்மை செயல்முறைகள் மற்றும் நீர்ப்பாசன வளர்ச்சித் திட்டங்களின் ஒருங்கிணைந்த பயன்பாட்டால் வேளாண்மை மேம்படுத்தப்பட்டு உணவுத் தன்னிறைவு பெற்றதே பசுமைப் புரட்சி ( Green Revolution) என்று அறியப்படுகிறது. அடிக்கடி பஞ்சங்களுக்குப் பழக்கப்பட்ட இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் ஒருமுறை கூட பஞ்சம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 1963ஆம் ஆண்டில் முனைவர் நார்மன் போர்லாக் இந்தியாவில் மரபுமாற்ற வீரிய கோதுமை விதைகளை அறிமுகப்படுத்தினார். இவரே இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை எனக் கருதப்படுகிறார்.[1]

முடிவுகள்

பல்வேறு வீரிய விதைகளில் கோதுமை சிறந்த ஈட்டைத் தந்தது. மேம்பட்ட வேளாண்மை செயல்முறைகளை விவசாயிகளிடம் கொண்டு செல்வதில் அனைத்திந்திய வானொலியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இந்திய வேளாண் அறிவியலாளரும் இந்திய பசுமை புரட்சியின் தந்தையுமான எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் இந்திய நடுவண் அமைச்சில் வேளாண் அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் ஆகியோரின் கூட்டு முயற்சியும் பசுமைப் புரட்சியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

எதிர் கருத்துகள்

வேதிய பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதால் மண்ணின் தரம் குறைந்ததாக விமரிசனங்கள் எழுந்துள்ளன. இது எதிர்கால வேளாண்மையை பாதிக்கும் என்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் பரவக் காரணமாக அமைந்ததாகவும் இயற்கை அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அண்மைக்காலங்களில் கரிமக் களைக்கொல்லிகளும் இயற்கை உரங்களும் பயன்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.

 

அறிவியல் எழுச்சி :

கோ. நம்மாழ்வார் (G. Nammalvar6 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம்திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார்.[1] இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.

………………………………..தொடரும் …………………….

புதன், 26 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 160 அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும். கும்பமேளா..

 

சான்றோர் வாய் (மைமொழி : 160 அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

கும்பமேளா..

(கிண்ணத் திருவிழா) (Kumbh Mela) இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். இந்தியாவின் அலகாபாத்அரித்வார்உச்சைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் இவ்விழா நடைபெறும்.

திரிவேணி சங்கமம்:

திரிவேணி சங்கமம் என்பது கங்கை யமுனை ஆறுகளும் கண்ணுக்குப் புலப்படாத சரசுவதி ஆறும் கூடும் இடமாகும். இந்த மூன்று ஆறுகளின் கூடல் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) நடைபெறுகிறது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா முழு (பூர்ண) கும்பமேளா எனப்படும். மற்ற இடங்களில் நடைபெறும் கும்பமேளாவை விட இது புகழ்பெற்றது. பன்னிரண்டாவது முழு (பூர்ண) கும்பமேளா அதாவது 144 ( 12 X 12 ) ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா எனப்படும். மகா கும்பமேளாவே உலகில் அதிக அளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும்.

வேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற பானையிலிருந்து (கும்பம்) இந்த நான்கு இடங்களில் விழுந்தன என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக, புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள்.

 

மகாகும்பமேளா:

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் மகா கும்ப மேளா நடைபெற்று வருகிறது. வருகின்ற பிப்ரவரி 26-ஆம் தேதி இந்த நிகழ்வு இன்றுடன் நிறைவடைகிறது.

 

 கும்பமேளா முடிவதற்குள்,   இச்சூழலில் கங்கையும், யமுனா நதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள நீரின் தூய்மை குறித்து இரண்டுவிதமான அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்(சி.பி.சி.பி), தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மகா கும்பமேளாவில் மக்கள் புனித நீராடும் நீரின் தூய்மை குறித்து அறிக்கை ஒன்றை சமர்பித்தது.

கங்கை-யமுனை நதியின் நீரில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட பல மடங்கு அதிகமான கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி அன்று உத்தரபிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (UPPCB) தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் முடிவுகள் சி.பி.சி.பி.யின் நீர் தரம் தொடர்பான அறிக்கை முடிவுகளை நிராகரித்தது.

அறிவியல் எழுச்சி :

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை கூறுவது என்ன?

்ரீங்காவேர்பூர் படித்துறை, லார்ட் கர்சன் பாலம், நாகவாசுகி கோவில், திஹா படித்துறை, நைனி பாலம், மற்றும் கங்கை - யமுனா ஒன்று சேரும் இடமான திரிவேணி சங்கம் உள்ளிட்ட இடங்களில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியது.

ஜனவரி 13-ஆம் தேதி அன்று கங்கை நதி மேல் அமைந்திருக்கும் திஹா படித்துறை மற்றும் யமுனா நதியின் நைனி பாலத்தின் அருகே இருந்து எடுக்கப்பட்ட 100 மில்லி லிட்டர் நீரில் 33,000 எம்.பி.என் (தண்ணீரில் உள்ள பாக்டீயாக்களின் செறிவை அளவிடும் முறை) அளவுக்கு கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் இருந்தன.

்ரீங்காவேர்பூர் படித்துறையில் இதன் அளவு 23,000 ஆக இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 100 மி.லி. நீரில் 2500 என்ற அளவில் எம்.பி.என். இருந்தால் மட்டுமே அது குளிப்பதற்கு பாதுகாப்பான நீர் என்று அறிவிக்கிறது.

காலையிலும் மாலையிலும் திரிவேணி சங்கமத்தில் தான் பெரும்பாலான மக்கள் புனித நீராடுகின்றனர். அங்கே இந்த கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் 13,000 எம்.பி.என். என்ற அளவில் உள்ளது.

கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் மட்டுமின்றி அந்த நீரில் பல மாசுக்கள் கலந்திருப்பதால் அது குளிக்கவும் குடிக்கவும் தகுதியற்ற நீராக குறிப்பிட்டிருந்தது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

அதிகப்படியான மக்கள் அங்கே குளிக்கின்றனர். அவர்களின் உடல் மற்றும் துணிகளில் இருந்தும் அசுத்தங்கள் வெளியேறுவதால் அங்கே உள்ள நீரில் இந்த பாக்டீரியாக்களின் செறிவு அதிகரிக்கிறது என்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கவலை தெரிவித்திருந்தது.

 

அறிவியல் வீழ்ச்சி:

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது என்ன?

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை வெளியான பிறகு இது அரசியல் தளத்தில் இது பேசுபொருளானது. உத்தரபிரதேச அரசு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை முழுமையாக நிராகரித்தது.

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி, அந்த மாநில சட்டமன்றத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி அன்று அறிக்கையை முழுமையாக நிராகரித்தது மட்டுமின்றி, திரிவேணி சங்கமத்தில் உள்ள நீர் குளிப்பதற்கு மட்டுமின்றி குடிப்பதற்கும் உகந்தது என்று கூறினார்.

"நீரின் தரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் சங்கமத்தைச் சுற்றியுள்ள அனைத்து கால்வாய்களும் கண்காணிக்கப்படுகின்றன. நீர் முழுமையாக சுத்தகரிக்கப்படுகிறது. மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ச்சியாக நீரின் தரத்தை மதிப்பீடு செய்து வருகிறது," என்று அவர் தெரிவித்தார்.

பிரயாக்ராஜில் 100 மி.லி நீரில் 2500க்கும் குறைவான அளவிலேயே கோலிஃபார்கள் இருப்பதாக தெரிவித்தார். மகா கும்பமேளாவின் நன்மதிப்பை சிதைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனின் அளவு 3-க்கும் குறைவான அளவே இருந்தால் போதும். ஆனால் சங்கமம் பகுதியில் அதன் அளவு 8-9 ஆக இருக்கிறது. எனவே சங்கமத்தில் உள்ள நீர் குளிப்பதற்கு மட்டுமின்றி குடிப்பதற்கும் உகந்தது என்று தெரிவித்தார் யோகி.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்,"பாஜகவை சேர்ந்த தலைவர்கள் அந்த நீரை குடித்து, அதில் குளித்தால் மட்டுமே கங்கை சுத்தமாக உள்ளது என்று நாங்கள் நம்புவோம்," என்று தெரிவித்தார்.

உத்தரபிரதேச சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சிவ்பால் சிங் யாதவ், "இந்த நிகழ்வின் மையமாக கங்கை நதி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நதியின் நீர் குடிக்க உகந்ததாக இல்லை. அரசு அந்த கங்கை நதி நீரைக் கையில் எடுத்து உண்மையைப் பேச வேண்டும்," என்று கூறினார்.(விக்கிப்பீடியா, கட்டுரைச் சுருக்கம்)

 

எவ்வகையிலும் மக்களைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. வயதானவர்களும், பெண்களும் குழந்தைகளும் இன்றுவரை புனித நீராடிவருகின்றனர்.  இத்திருவிழா இன்றுடன் நிறைவுறும் நிலையில் 63 கோடி மக்கள் நீராடிப் பாவங்களைத் தொலைத்துப் புனிதம் அடைந்துள்ளனர் என்று ஊடகம் அறிவிக்கிறது.

உலகம் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளபோதும் மதம் அறிவியலைப் புறந்தள்ளிவிடுகிறது.

 

‘புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையான் காணப் படும் .” 298.  எனப் புனித நீராடல் குறித்த வள்ளுவரின் அறிவியல் சிந்தனையை மனங்கொண்டு வாழ்வோமாக….!

…………………………………தொடரும் ………………………..

 

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 159 அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 159 அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

ஆண் பெண் பாலுணர்ச்சிக்கு மூன்று விளக்கங்கள்.

(Three Contributions to the theory of Sex.)

 பாலுணர்ச்சி என்பது பிறந்த குழந்தையிடமே இருக்கிறது. குழந்தை  வளரும்போது அதுவும் பல பருவங்களாக வளர்ச்சி அடைகிறது. மனிதனாகிய பருவ  வயது அடைந்ததும் பாலுணர்ச்சி முதிர்ச்சி அடைந்து இனவிருத்திக்குத் தயாராகிறது.

ஆண் குழந்தை தன் தாயிடத்திலும்  பெண்குழந்தை தன் தந்தையிடத்திலும்  கொள்ளும் இந்த அன்புணர்ச்சியே பின்னால் பருவ காலத்தில் ஏற்படும் காதல் உணர்ச்சிக்கு முதற்படியாகிறது. பெற்றோரிடம் இத்தகைய அன்பைப் பெறாத குழந்தைகள் பின்னாளில் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களாக ஆகின்றனர்.

 

ஆணிடம் இனவிருத்தி சக்தி அதிகமாகும்போது காதல் உண்டாகிறது. போகப்போகக் குறைந்துவிடுகிறது. உடல் உள்ளுறுப்புகள் மாறுதலும் வளர்ச்சியும் காதலுக்குக் காரணம். ஆயின் மனோதத்துவத்தில் மனத்தின் காதல் வேட்கையும் காம உணர்ச்சிக்கு ஆதாரமாகிறது. மனம் தன்னை அறியும் பருவத்திற்கு வளர்ச்சி அடைந்ததும் ஏதாவது ஒரு பொருளை ( Object ) மையமாகக் கொண்டு தன் உணர்ச்சிகளைச் சுற்றிப் படரச் செய்கிறது. காதல் மோகத்திற்காகத் தன்னைத்தானே வருத்திக்கொள்வது மாசோகிசம்  (Masochism) . தான் காதல் கொண்டவரைத்   துன்புறுத்தல் சேடிசம்  (Sadism).

 

 இனக்கூட்டமும் இறைமை அச்சமும் (தீட்டும்)

(Totem and Taboo ) 

 தீட்டுகளின் பெயரால் இதைச் செய்யக்கூடாது; அதைச் செய்யக்கூடாது  ; சில வார்த்தைகளைச் சொல்லக்கூடாது ; சில பொருள்களைத் தொடக்கூடாது என்று தடைகளின் மூலமாகவே பழங்காலச் சமுதாயத்தில் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் நிலை நிறுத்தப்பட்டன.  இம்மாதிரியான தீட்டுகள் தாம் (அரசர், மத குருமார்) சமுதாயச் சட்டங்கள், பழக்க வழக்கங்களாயின.


 வாழ்க்கையின் ஒரு தத்துவம்  (A Philosophy of Life)

மனிதனின் அறிவுணர்ச்சிகளோடு  தொடர்புடையவை மதம், தத்துவம்,  விஞ்ஞானம் ஆகியன.    மதமும் விஞ்ஞானமும்  ஒன்றுக்கொன்று நேர் மாறானவை.

மதம் மனித இனத்தில்  மிகுந்த செல்வாக்குடையது.

உலகில் இரண்டு விஞ்ஞானங்கள்-

1. மனோ தத்துவ விஞ்ஞானம்

2. இயற்கை பற்றிய விஞ்ஞானம்.

 

அறிவியல் புரட்சி - வீழ்ச்சி ;

 பழங்காலத்தில் மனநலம் இழந்தோரைப் பிசாசு, பேய் பிடித்துக் கொண்டதாகக் கருதி அதற்கான மாய மந்திரங்களையெல்லாம் செய்துவந்தனர். மந்திரத்தால் நோயும் பிணியும்  நீக்கும் வித்தைகள் இன்றுங்கூட நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மருத்துவமனைகளுக்கும் பஞ்சமில்லை. தெய்வக் குறையால் வந்ததெனக் கருதும் நோயாளிகளில் பெரும்பாலோர் மன நோயாளிகளே. மனநலம் இழந்தோரின் பிறழ்நிலை நடத்தைக்குப் (Abnormal Behavior ) பில்லி. சூனியம், செய்வினை காரணமெனக்கூறிச் சாமியார்கள் ஆட்டம் போடுவர்.

”மன நோயின் ஆணிவேர்கள் கட்டுப்பாடில்லாத உணர்வுகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளும் குற்ற உணர்வு  மிகுந்தமையால் அதற்குக் கழுவாய் தேடும் முயற்சிகளுமேயாகும்.”


 சிக்மெண்ட் பிராய்டு  - உளவியலறிஞர் உளப்பகுப்பாய்வு முறையை உலகுக்கு அளித்தார். இதுவரை மருத்துவ உலகில் இருந்த பல புரியாத புதிர்களுக்கு இவரின் ஆய்வுவழி விடை கிடைத்தது. மருத்துவ உலகில் மாபெரும் புரட்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.


”மனிதர்கள் தங்கள்  மனத்தில் உண்டான தகாத எண்ணங்களை மனத்துள் அடக்க முயல்வதால் நோய்வாய்ப்படுகிறார்கள்”- சிக்மெண்ட் பிராய்டு.

………………… தொடரும் …………………..

திங்கள், 24 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 158. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 158. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சிக்மெண்ட் பிராய்டு – 1856 -1939.

 1856 மே 6ஆன் நாள் செக்கோஸ்லாவாகிய நாட்டில் பிறந்தார். இந்த இளஞனைச் சிந்திக்கத் தூண்டிய பொன்மொழி  -  “ உலகின்  இரகசியங்கள் எல்லாம் இயற்கையில்தான் அடங்கியிருக்கின்றன ; இயற்கையின் இரகசியங்களை  அறிவதுதான் அறிவின் வேலை. “.  இதனால் அவர் விஞ்ஞானம் கற்றார் ; நரம்பியல் மருத்துவரானார்.

 

 மனிதன் எதனால் சிந்திக்கிறான் ? சிந்திக்கவும் உனரவும் அவனால் எப்படி முடிகிறது ? மனம் என்பது என்ன ..?  இவ்வினாக்களைத்  தம் வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து விடைகளைக் கண்டறிந்தார்.

 

கனவுகளின் உட்பொருள் விளக்கம் : (The Interpretation of Dreams.) கனவுகளைப் பற்றிய மூடநம்பிக்கைகளை பிராய்டு தகர்த்தெறிந்தார். தூங்கும் மனம் தன் நினைவுகளைப் படமாக்கிப் பார்க்கிறதே அதுதான் கனவு. படமாக்குவதும் பார்ப்பதும் மனம் தான்.

மனித மனத்தில் உண்டாகி நிறைவேறாத நிலையில் நின்றுவிடும் ஆசைகளைக் கனவிலாவது நிறைவேற்றிக்கொள்வதற்காகத்தான் மனிதர்கள் கனவு காண்கிறார்கள்.

1. விருப்பக் கனவுகள்- (Wish Fulfilment  Dreams)

2. அச்சம் / கவலை – (Anxiety Dreams)

3. துன்பக் கனவுகள் – (Punishment Dreams)

 

விலங்குணர்ச்சியும் பண்பாட்டுணர்ச்சியும் 

(ID – Ego)- தன் முனைப்பு.

 இயற்கையில் இருக்கும் மனிதனின் விலங்குணர்ச்சி உயர்வழிப்படுத்தப்பட்டு (Sublimation)  பண்பாட்டுணர்ச்சி வளர்கிறது. மற்றவனைக் கொல்லத் துடிப்பது (கோபம்) விலங்குணர்ச்சி ; அவனை மன்னித்து விடுவது பண்பாட்டுணர்ச்சி.

விலங்குணர்ச்சி உயர்வழிப்படுத்தப்படுவதற்கு காரணம் மனசாட்சி (Super Ego)  மனசாட்சி என்பது மனிதனின் பண்பாட்டுணர்ச்சியின் வளர்ச்சி அடைந்த பகுதிதான்.

 

பெரிய கவிஞர்கள், விஞ்ஞான மேதைகள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் எல்லாரும் இவ்வாறு பலமான  விலங்குணர்ச்சி  ‘உயர்வழிப்பட்டதால்’ உண்டானவர்களே. அதே சமயம் பயங்கர குற்றவாளிகளும் பைத்தியக்காரர்களும் இந்த மாதிரியான கொடுமையான விலங்குணர்ச்சிக்கு  ஆளானவர்கள் தான், என்கிறார் பிராய்டு.

 

 ஒரு தனி மனிதனின் விலங்குணர்ச்சி இன்னொரு தனி மனிதனையும் ; ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்தமான விலங்குணர்ச்சி இன்னொரு சமுதாயத்தையும் அழித்துவிடும்.

……………………………………மேலும் தொடரும் …..

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 157. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 157. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

அறிவியல் எழுச்சி:

மாமேதை ஹனிமான்: ஓமியோதி மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சாமுவேல் பிரடெரிக் ஹனிமான் – 1755 – 1843.

 செர்மன்நாட்டில்  உள்ள மேய்சன் என்ற ஊரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் . தன்னுடைய 24 ஆம் வயதில் அலோபதி மருத்துவத்தில் எம். டி. பட்டம் பெற்றார்.  துயரத்தில் வாடும் நோயாளிகளை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் அலோபதி மருத்துமுறை இவருக்குப் பிடிக்கவில்லை.  எனவே அந்த மருத்துவத் தொழிலை விட்டொழித்து மெழிபெயர்ப்புப் பணிக்குச் சென்றுவிட்டார். என்றாலும் அவருடைய மனம் மருத்துவ உலகைச் சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருந்தது.  நோயாளியின் துயரத்தை   உடல் இயல்பின் இயக்கத்தைத் துன்புறுத்தாது நிரந்தரமாகக் குணப்படுத்தக்கூடிய வழியைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே இருந்தார்.

1790 ஆம் ஆண்டு ”  கல்லென்” என்பவர் எழுதிய ஆங்கில மருத்துவப் பேரகராதியை செர்மனிய மொழிக்கு மொழி மாற்றம் செய்து கொண்டிருந்தார். அந்நூலில்  “கொய்னா” சிறந்த மருந்து என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்டார்.  முறைக்காய்ச்சலுக்கு கொய்னாதான் மருந்து என்பது அவருக்குத் தெரியும் எனினும்  கொய்னா மரங்கள் சூந்திருக்கும் இடத்தில் வசிப்போர்க்கு அடிக்கடி முறைக்காய்ச்சல் கண்டிருந்தது.  அவர் கொய்னா மரப்பட்டைச் சாற்றை உட்கொண்டு வந்தார். அவருக்கு முறைக்காய்ச்சல் நோய்க்குறிகள் தோன்றின. இச்சோதனையை பலரிடம் சோதனை செய்து பார்த்தார். நோய்க்குறிகள் ஒன்றாகவே இருந்தன.

  அதே மரப்பட்டையைப் பொடித்து ஒரு நுட்பமான முறையில் வீரியப்படுத்தி ஒரு சிறிதளவே உண்டபோது  முறைக்காய்ச்சல் முற்றிலும் குணமாகியது. இந்தச் சோதனை ஒரு புதிய மிகச் சிறந்த மருத்துவ முறை ஒன்று தோன்றுவதற்குக் காரணமாகியது.  

எந்த ஒரு பொருள் மிகுவினால் நோய் செய்கின்றதோ அதே பொருளை வீரியப்படுத்தி அதாவது அணுவாக்கிச் சிறிதளவே உண்ணும் போது அந்நோய் நீங்கிவிடுகிறது என்னும் மாபெரும் கண்டுபிடிப்பு 1796 ஆம் ஆண்டு மருத்துமேதை ஹனிமானால் வெளியிடப்பட்டது. இந்த மருதுவ முறைக்கு ஓமியோபதி என்று பெயர். (Homoeopathy – Treating disease by  very small doses of drugs )

ஓமியோபதி தத்துவம்.

 முள்ளை முள்ளால் எடுப்பதைப் போன்றது இம்மருத்துவ நெறி.   எந்த ஒன்றினால் நோய் தோன்றியதோ அந்த ஒன்றினாலேயே அந்நோயை நீக்குவது. (Simila Similibus Curentur)

ஓமியோபதி என்றால்…Homoeopathy.

Homoeo = Same = ஒத்த.

(Pathos – Affection = உணர்வு/ துன்பம். ஒத்தது ஒத்ததைக் குணமாக்கும்.

ஒரே மருந்து மிகக் குறைந்த அளவு (Sigle Remedy ; Minimum Dose ) என்பது  ஓமியோபதி தத்துவம்.

 

 ஓமியோபதி மருந்துகள் நோயை விரைவாக எளிதாக, பூரணமாக குணப்படுத்திவிடுகின்றன. ஹனிமான்  தன்னுடைய மருத்துவ பேரேட்டில் (Organon of Medicine ) முதல் விதியாக எழுதியுள்ளது. “ ஒரு மருத்துவரின் கடமை நோயுற்ற மனிதனை பழைய நிலைமைக்கு நலமாக்குதலே “ (பக்க விளைவுகள் இன்றி  விரைவாக, நிரந்தரமாக) என்கிறார்.

இன்று ஓமியோபதி மருத்துவம் உலகெங்கும் மக்களை நல்வழியில் நலமாக்கிக்கொண்டுவருகிறது. அரிய பெரிய ஓமியோ மருத்துவ முறையை உலகுக்கு வழங்கிய மாமேதை ஹனிமான் இறவாப் புகழுடையவர் 70 புத்தகங்கள் எழுதிக் குவித்தவர். ஓமியோபத்ய் மருத்துவத் தத்துவங்களை

1. Organon of medicine

2. Materia Medica Fura

3.  Chronic Disease

ஆகிய நூல்கள் வழி எடுத்துரைத்தவர்.

 

அறிவியல் வீழ்ச்சி:

 உலகம் போற்றும் மாபெரும் மருத்துவ மேதையை செர்மானிய அரசு ஹனிமானை நாடு கடத்தியது. “ – மருத்துவர் எச். செல்வராசு, மனித வரலாற்றில் மூன்று இலட்சம் ஆண்டுகள்.-1969.

 

“ A Doctor should know what is curable in the disease (or not curable). He should know what are the medicines which can cure the conditions and thirdly he should know  to employ the medicine   to effect a rapid and gentle cure.” –Dr. HAHNEMAN.

இந்த மாமேதை 1845 ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் நாள் பாரிசு நகரில் இயற்கை எய்தினார்.

 .............................தொடரும்..........................................

சனி, 22 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 156. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 156. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

 ஆர்க்கிமிடீஸ்:

உலகம் முழுவதையும் வென்று அவ்வுலகிற்கு ஏற்ற ஒரு தலைநகரை நைல் நதிக்கரையில் கட்டி அந்நகருக்கு என் பெயரையே இடுவேன், அந்நகரில் உலகில் உள்ள எல்லா விஞ்ஞானிகளையும் ஒன்று சேர்த்து பல்கலக் கழகம் ஒன்றை நிறுவுவேன்என்றான் மாவீரன் அலெக்சாண்டர். ஆனால், உலகை வென்று திரும்பும் வழியில் பாபிலோன் நகரில் மாண்டுபோனான்.

 அலக்சாண்டர்  கூறிய கூற்றை  சிலியோமீனிசுஎன்ற படைத்தலைவன் முயன்று நைல் நதிக்கரையில்அலக்சாண்ட்ரியாநகரை நிறுவினான். அங்கு ஏற்படுத்திய பல்கலைக் கழகத்தில்  உலகில் உள்ள விஞ்ஞானிகளையும் விஞ்ஞான நூல்களையும் தேடிக்குவித்தான். அப்பல்கலைக்  கழகத்தில் ஏறத்தாழ ஐந்து லட்சம் நூல்கள் சேர்க்கப்பட்டன.

சிசிலித்தீவில் அரசாண்ட ஹீரோமன்னர் விஞ்ஞானிகளைப் போற்றி ஆதரித்தார். அந்த அரசவையில்  சிறந்த விஞ்ஞானிகளில்  ஆர்க்கிமிடீஸ்  தலைசிறந்தவர் ஆவார்.

 

போதிய நீளமான நெம்புகோல் ஒன்றை அமைத்துங்கொடுங்கள் இந்த உலகையே  நான் அசைத்துக்காட்டுகிறேன்எனக் காறி நெம்புகோலின் தத்துவத்தை நிலை நிறுத்தினார்  ஆர்க்கிமிடீஸ்.

 

 விண்வெளியில் கோள்கள் யாவும் எவ்வாறு இயங்கி வருகின்றன என்பதை விளக்கிய முதல் விஞ்ஞானி இவரே.! பூமி சுற்றுவதையும் அது நாளொன்றுக்கு ஒரு முறை  தன்னையே சுற்றிக்கொள்வதால் இரவும் பகலும் உண்டாகின்றன என்பதையும் விளக்கிக் காண்பித்த முதல் பெருமையும் இவரையே சாரும்.

 

அறிவியல் வீழ்ச்சி.

 அலெக்சாண்டர் மறைவுக்குப்பின் கிரேக்கப் பேரரசு  உரோமானியர் கைகளில் வீழ்ந்தது. கி.மு. 46இல்  உச்சநிலையில் கொடிகட்டிப் பறந்த உரோமப் பேரரசு அறிவு இருந்த இடத்தில் ஆன்மிகத்தை வைத்து அழகு பார்த்தது. அதன் விளைவு கடவுள் பெயரால்  அறிவியல் கண்டுபிடிப்புகளும் உண்மைகளும்  குழி தோண்டிப் புதைக்கப்பட்டன.

 

போதிய நீளமான நெம்புகோல் அமைத்துக்கொடுங்கள் இந்த உலகத்தை அசைத்துக்காட்டுகிறேன்  என்ற அறிவியல் ஆசான் ஆர்க்கமிடீசை  உரோமப் பேரரசு வாளால் வெட்டிக் கொன்றது.

…………………….தொடரும் …………………………

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 155. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 155. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

 

அறிவியல் புரட்சி : வீழ்ச்சி.

மதப் பின்னணியில் ஆட்சி செலுத்திய ஆட்சியாளர்கள் 16 ஆம் நூற்றாண்டில் எல்லா நாடுகளிலும் இருந்தனர்.  கோப்பர் நிக்கசு நூலைப்படித்த இளைஞர்கள் புதிய உலகைக் காணத்துடித்தனர். ; பழமையைப் புறக்கணிக்க எழுந்தனர்.  அவ்வாறு எழுச்சியுற்ற இளமை உள்ளங்களைத் த்ட்டி எழுப்பினார் ஜியார்டனோ புரூனோஎன்ற இத்தாலிய கிறித்துவத் துறவி.

 

புரூனோவின் சொற்பொழிவுகளை உரோமாபுரியும்  பிரான்சும் இங்கிலாந்தும் செர்மனியும்  கேட்டன. புரூனோ கோப்பர் நிக்கசு  கூறிய கருத்துகளை மெய்யென்றார். கிரேக்க விஞ்ஞானிகளின் கூற்றுகளை சான்றுகள் காட்டி நிரூபித்தார்.  ஜெனிவா நகரில் இவரது சொற்பொழிவைக் கேட்ட மதவாதிகள் இவரை உடனே நாடு கடத்தினர்.

கோப்பர் நிக்கசு எழுதிய நூலின் பெயர் புரட்சிகள் என்பதாகும். புரூனோவின் அறிவுப் புரட்சியால் மேலை நாடுகளில்  புதிய எழுச்சியும் புதிய கருத்துகளும் வேரூன்றத் துவங்கின.

புரூனோ சென்ற நாடுகளெல்லாம் அவரது சொற்பொழிவுக்குத்  தடை விதிக்கலாயின. தனது தாயகமாம் இத்தாலிக்கு அவர் திரும்பியபோது ஜெனீவா அரசு அவரைக் கைது செய்தது. விசாரணை என்ற பெயரில் அவரை எட்டு மாதங்கள் இருட்சிறையில் விலங்கு பூட்டிக் கொடுமை செய்தது.  இத்தாலிய அரசின் வேண்டுகோளின்படி இத்தாலிய சிறைக் கூடத்திற்கு அனுப்பி வைத்தது.

 

இத்தாலிய நீதிமன்றம் புரூனோவின் மீது என்ணற்றக் குற்றச்சாட்டுகளைச் சாற்றியது.  மதப் பகைவன் எனப் புரூனோவை அதட்டினர், உருட்டினர், அடித்தனர் எல்லாவிதக் கொடுமைகளும் அவருக்கு நேர்ந்தன.

அன்றைய உரோமை நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 17 – 2- 1600 இல். உரோமை நகரின் பொதுச் சந்தையில் மரம் ஒன்றிலே புரூனோவைப் பிணைத்துக் கட்டி, அவரைச் சுற்றி விறகுகள் அடுக்கப்பட்டுத் தீயிட்டனர்.

…………………………..தொடரும் …………………….