ஞாயிறு, 2 நவம்பர், 2025

தமிழமுது –160 – தொல்தமிழர் இசை மரபு:...............முனைவர் ராம. கெளசல்யா.

 

தமிழமுது –160 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 20.

தமிழிசை.

 முனைவர் ராம. கெளசல்யா.

மழவை சுப்பிரமணிய பாரதி, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், திருவாரூர் ராமசாமிப்பிள்ளை, வைத்தீஸ்வரன்கோவில் சுப்பராமய்யர், கவி குஞ்சரபாரதி, மாயூரம் வேதநாயகம்பிள்ளை, சியமா சாஸ்திரி, மாம்பழக்கவிராயர், மதுரகவி வெங்கடஎட்டப்பர், குமார எட்டேந்திரர், ஸ்ரீவாஞ்சியம் சுப்பராம அய்யர், வேதநாயக சாஸ்திரியார், கடிகைப்புலவர்கள், மஸ்தான்சாகிபு எனப் இப்பட்டியல் இன்னும் நீளும்.

இவர்களுடைய படைப்புகள் மிக உயர்தரமாக அனைத்துச் சிறப்புகளும் நிரம்பியவையாக இருக்கின்றன.

 

சில குறிப்பிடத்தக்க செய்திகள்:

ஆனையா என்ற பெயர் ஒரு பெயர் போலத் தோன்றினாலும் ஆனை அய்யர், ஐயா அய்யர் என்ற சகோதரர்களே இவ்வாறு அழக்கப்படுகிறார்கள்.  கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரம்’ அக்காலகட்டத்தில் ஒரு புரட்சிகரமான படைப்பு.. இதில் மராட்டிய வடிவங்களான கட்கா, ஓவி, சாகி, தண்டி  போன்றவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்து தந்திருக்கிறார்

 

 காவடிச் சிந்துப் பாடல்களின் தந்தை என்று அழக்கப்படும் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துகள், பண்டிதரையும் பாமரரையும் ஒரு சேரக் கவரும் சிறப்புப் பெற்றவை. யாழ்ப்பாண ஆறுமுகநாவலர் காதிகாமக் கந்தன் மீது ஆறு கிருதிகள் பாடி இருக்கிறார்.

 

சர்வசமய கீர்த்தனைகளை இயற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை முன்சீப் பதவி வகித்தவர். தம்முன் நடக்கும் நிகழ்வுகளையும் கீர்த்தனை வடிவில் பதிவு செய்தவர்.

………………………. தொடர்கிறது…………………………….

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக