ஞாயிறு, 6 மே, 2018

திருக்குறள் -சிறப்புரை :868


திருக்குறள் -சிறப்புரை :868
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப்பு உடைத்து. ---- ௮௬௮
(குணன் இலனாய் ; இனன் இலனாம்)
ஆறறிவுக்குரிய குணம் ஒரு சிறிதும் இல்லாதவனாய், செய்யும் குற்றங்கள் பல உடையவனாய் ஒருவன் இருந்தால் அவன் யாதொரு துணையுமின்றித் தனித்து,  தன்னை அழிக்கக் கருதும் பகைவைர்க்கு எளிய துணையாவான்.
“நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்
கூர்த்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு.” –பழமொழி.
நற்குணமும் நல்லறிவும் இல்லார், தம்மை வரித்தினாராயின் அங்ஙனமே தாமும் அவரை வருத்துதல் சான்றோர்தம் கொள்கை இல்லை.

1 கருத்து: