செவ்வாய், 14 ஏப்ரல், 2015

அகநானூறு

சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர் கொல்லோ தோழி
                                                         மாமூலனார்,அகநா.1 : 5-7
தோழீ ! சாணைக் கல் செய்வோன் அரக்கோடு சேர்த்துப் பிணித்த கல்லைப் போலப்  நின்னைப் பிரியேன் என்று கூறிய  சொல்லைத் தலைவர் மறந்து விட்டனரோ?
                                                                                                                 -ஆற்றாமை


பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி
                                                      …………….. அகநா.7 : 18
பொன்னொடு புலிப் பல் கோர்த்து அணியப்பெற்ற ஒலிக்கும் தாலி




நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல்
அம்தீம் கிளவிக் குறுமகள்
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே
                                                   கல்லாடனார், அகநா.9 : 24- 26
நாணொடு செறிந்த கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் அழகிய இனிய சொல்லினையும் உடையாளது மெல்லிய தோள்களை அடைதற்கு விரும்பிச் சென்றது எம் நெஞ்சு.
                                                                                           -காதல்




யாமே பிரிவின்று இயைந்த துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே
                                                            கபிலர், அகநா.12 : 4, 5
தலைவனே ! யானும் தலைவியும் பிரிவின்றிக் கூடிய உவர்த்தல் இல்லாத  நட்பினால் இரு தலைகளை உடைய  பறவையின் உடலில் இருக்கும் ஓர் உயிர் போல் ஆனோம்.
                                                                                                   -நட்பு


வினை நயந்து அமைந்தனையாயின் மனை நகப்
பல்வேறு வெறுக்கை தருகம் வல்லே
                                  காவன்முல்லைப் பூதனார்,அகநா.21: 7,8
நெஞ்சே, பொருள் ஈட்ட விரும்பி வந்தனையாகலின் தலைவி மகிழும் வண்ணம் பலவகையான  செல்வங்களை ஈட்டித் தருவோம்.
                                                                         -பொருள்

உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே
                                     வெள்ளாடியனார், அகநா. 29 : 22, 23
தலைவியே !  நான் பொருள் ஈட்டச் சென்ற பொழுது, என் உடல் ஆங்குப் பிரிந்து இருந்ததே அல்லாமல் அறியாமை உடைய என் உள்ளமோ எப்பொழுதும் நின் அருகிலேயே இருந்தது.
                                                                                         -காதல்





ஏதில் பொருட் பிணிப் போகி தம்
இன் துணைப் பிரியும் மடமையோரே
                        மதுரையாசிரியர் நல்லந்துவனார்,அகநா.43 : 14 ,15
நிலையில்லாத பொருள் மீது பற்றுகொண்டு, தம்முடைய  இனிய துணைவியைப் பிரிந்திருப்போர் மடைமை உடையோரே.
                                                                                               -அறியாமை

இன்னுயிர் கழிவதாயினும் நின் மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காமநோய் எனச் செப்பாதீமே
                                      நொச்சிநியமங்கிழார், அகநா. 52 : 13- 15
தோழீ !  என் இனிய உயிர் உடலைவிட்டுப் பிரிந்து போவதானாலும் இப்பசலை நோய் தலைவன்மீது கொண்ட காமத்தால் உண்டானது என யாரிடமும் சொல்லாதே.
                                                                                                             -அச்சம்


கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினும் செறிய
அருங்கடிப் படுக்குவள் அறனில் யாயே
                                         குடவாயிற் கீரத்தனார்,அகநா.60 : 13-15
 தோழீ !  களவொழுக்கத்தை அன்னை அறியின்,  சோழமன்னர் குடந்தை என்னும் ஊரின் கண் பகைவர் நாடு திறையாகத் தந்த நிதி வைக்கப்பட்ட இடத்தைப் பாதுகாத்தலைக் காட்டிலும் இரக்கமற்ற அன்னை எனக்கு மிகவும் அரிய பாதுகாப்பினைச் செய்வாள்.
                                                                                               -அச்சம்



நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார் பிறர் கொள விளிந்தோர்...
                                                            மாமூலனார்,அகநா. 61 : 1, 2
ஒருவருக்கும் பயனின்றி வறிதே மரித்தல் இன்றிப் பிறர் பயன் கொள்ளுமாறு தம் பொருளை விடுத்து  இறந்தோர் நல்வினை செய்தோராவர்.
                                                                                                        -வாய்மை
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுவின்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்
                                         செல்லூர்க் கோசிகன் கண்ணனார், அகநா. 66: 1 – 4
பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகுடைய மக்களைப் பெற்ற தலைமையுடையோர் இவ்வுலகத்தே புகழொடு விளங்கித் துறக்க வாழ்வினையும் தப்பாது அடைவர்.
                                                                                                    -மக்கட்பேறு
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
                                                       நோய்பாடியார்,அகநா.67 : 8-10
தம் ஆனிரைகளை மீட்க வேண்டிப் போரிட்டு வென்று வீரமரணம் அடைந்த மானம் மிகுந்த  மறவர்களுடைய பெயரினையும் சிறப்பினையும் நடு கற்களில் பொறித்தனர். மயில் தோகை சூட்டிய அக்கற்களின் முன், ஊன்றிய வேலும் அதன் கண் சார்த்திய கேடகமும் செல்லும் வழிதோறும் பகைவர் போர் முனை இருப்பைப் போன்று காட்சிதந்தன.
                                                                                                              -வீரம்

ஈதல் இன்பம் வெஃகி மேவரச்
செய்பொருள் திறவர் ஆகி
               உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்,அகநா.69 : 5,6
ஈதலால் வரும் இன்பமே சிறந்தது எனக்கொண்டு அவ்வின்பம் தக்கும் உரிமையாக வேண்டும் என்ற விருப்பத்தால், தலைவன் பொருள் ஈட்டச் சென்றான்.
                                                                                                    -பொருள்


வெல் போர் இராமன் அருமறைக்கு அவித்த

பல்வீழ் ஆலம் போல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக