திருக்குறள்
– சிறப்புரை : 432
இவறலும் மாண்பிறந்த
மானமும் மாணா
உவகையும் ஏதம்
இறைக்கு.~
௪௩௨
கொடை வழங்காத சிறுமையும் போற்றத்தகாத மான உணர்ச்சியும் விரும்பத்தகாத
மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றங்களாகும்.
“கல்வி
அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல் சின வேந்தன் அவை காட்டும்….
~ பழமொழி
பகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல் வாய்ந்த அரசனது கல்வியின் பெருமையும்
சொல் வன்மையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக