திருக்குறள்
– சிறப்புரை : 435
வருமுன்னர்க்
காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். ~ ௪௩௫
குற்றம் புரிவதால் வரும் தீயவிளைவுகளை எண்ணி, அதனை விலக்கித் தன்னைக் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை, வைக்கோல்
பொதியின் முன் கவனமின்றி வைக்கப்பெற்ற தீயால், வைக்கோல் பற்றி எரிந்து சாம்பல் ஆவதைப்
போலக் கெடும்.
“
இசையும் எனினும் இசையாது எனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் …
- நாலடியார்
சான்றோர், தம்மால் முடியும் என்றாலும்
முடியாது என்றாலும் எப்பொழுதும் குற்றமற்ற செயல்களையே செய்ய எண்ணுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக