திருக்குறள்
– சிறப்புரை : 437
செயற்பால செய்யாது
இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக்
கெடும்.
– ௪௩௭
செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்யத் தவறியவன் செல்வம், நில்லாது அழியும்.
“
வழங்கான் பொருள் காத்திருப்பானேல் அ ஆ
இழந்தான் என்று எண்ணப்படும்”
– நாலடியார்
இல்லாதவர்க்கு ஒன்றும் வழங்காதவனாய் வீணாகப் பொருளைப் பூட்டி வைத்திருப்பவன்,
அப்பொருளை இழந்தவனாகவே எண்ணப்படுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக