திருக்குறள்
– சிறப்புரை : 442
உற்றநோய் நீக்கி
உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். – ௪௪௨
தனக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கி மீண்டும் அத்தகைய துன்பம் வரும் முன்னரே
காக்கும் நற்குணம் உடையவர்களைப் போற்றி நட்பாக்கிக் கொள்ளல் வேண்டும்.
“
சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி
வலியாகிப் பின்னும் பயக்கும்… “
ஐந்திணை எழுபது.
நற்பண்புகள் நிறைந்த பெரியோர் நட்பானது என்றும் நிலைபெற்று அமைவதோடு,
அடைந்தவர்க்கு வன்மைமிக்க துணையாகி மேலும் பல நன்மைகளை உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக