திருக்குறள்
– சிறப்புரை :475
பீலிபெய் சாகாடும்
அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப்
பெயின்.
– ௪௭௫
மயில் இறகுதானே, எடை குறைவு என்று
கருதி வண்டியில் அளவுக்கு அதிகமாக ஏற்றினால்
எடைகூடிச் சுமைதாங்காது வண்டியின் அச்சு முறிந்து விடும்.
வலிமைக்கும் எல்லையுண்டு என்பதறிக.
“
சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப.” முதுமொழிக்காஞ்சி.
முயற்சியின் வலிமை, முடிக்கும் செயலால் அறியப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக