திருக்குறள்
– சிறப்புரை :522
விருப்பறாச்
சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும்
தரும். -----
௫௨௨
அன்பு
நீங்காத சுற்றம் ஒருவனுக்கு அமையுமானால் அவன் வாழ்வில் நன்மைகள் பலவும் வந்து சேரும்.
“
கட்டு இல்லா மூதூர் உறைவு இன்னா.” -- இன்னா நாற்பது.
சுற்றமாகிய கட்டு இல்லாத பழைய ஊரிலே வாழ்தல் துன்பம் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக