திருக்குறள்
– சிறப்புரை :551
கொடுங்கோன்மை
கொலைமேற்கொண்
டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும்
வேந்து.
~~~ ௫௫௧
குடிமக்களின் அமைதி அழித்து அலைக்கழித்து வருத்தும் முறையற்ற செயல்களைச்
செய்யும் கொடுங்கோல் மன்னன் கொலை செய்வதையே தொழிலாகக்கொண்ட ஒரு கொலைஞனைவிடக் கொடியவன்.
” கொடுங்கோல்
வேந்தன் குடிகள் போலப்
படுகதிர் அமையம்
பார்த்திருந்தோர்…
சிலப்பதிகாரம்.
கொடுங்கோல்
வேந்தன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் அவன் செத்து ஒழிவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதைப்
போல. வெம்மையான கதிரவன் மறையும் பொழுதை அவர்கள் ( கோவலன். கண்ணகி. கவுந்தி அடிகள்)
ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக