திருக்குறள் -சிறப்புரை :902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். ----- ௯0௨
ஒருவன், தனக்குரிய கடமைகளைப் பேணாது, மனைவியின் பெண்மை இன்பத்தினையே விரும்பியிருப்பவன்
நிலைமை, அவனுக்குத் தலை குனிவை ஏற்படுத்தும்
; பிற ஆடவர்க்கும் வெட்கத்தைத் தரும்..
“பெண்டிரும் உண்டியும் என்று
உலகில்
கொண்டோர் உறூஉம் கொள்ளாத்
துன்பம்.” –சிலப்பதிகாரம்.
இவ்வுலகில் பெண்டிரும் உணவும் என்ற இரண்டு மட்டுமே இன்பம் என்று வாழ்வோர்
முடிவில் அளவற்ற துன்பத்தினையே அடைவார்கள்.
அருமை
பதிலளிநீக்கு