திருக்குறள் -சிறப்புரை
:1014
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை. ---- ௧0௧௪
சான்றோர்க்கு நாணுடைமை எனும் நற்குணமே அணியாகும் அவ்வணி இல்லையேல், பெருமிதம்
மிக்க நடை அவர்க்கு நோயாகும்.
“ நச்சியார்க்கு ஈயாமை நாணன்று
நாண் ஆளும்
அச்சத்தான் நாணுதல் நாண் அன்றாம் – எச்சத்தின்
மெல்லியராகித் தம் மேலாயார்
செய்தது
சொல்லாது இருப்பது நாண்.
–நாலடியார்.
தன்னை விரும்பி வந்தவர்களுக்கு ஒன்றும் கொடாமல் இருப்பது வெட்கமன்று
; நாளும் அசத்தால் முடங்கி இருத்தல் வெட்கமன்று ; தன்னினும் குறைபாடுடைய, அற்பர் ஆராயாது
செய்த சிறிய இழிவையும் பிறர்க்குச் சொல்லாமல் இருப்பதே நாணுடைமை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக