திருக்குறள்
-சிறப்புரை
:1154
அளித்தஞ்சல்
என்றவர்
நீப்பின்
தெளித்தசொல்
தேறியார்க்கு
உண்டோ
தவறு. ---- ௧௧௫௪
நம்மை எதிர்ப்பட்ட அன்றே தழுவி மகிழ்ந்து, நின்னைப்பிரியேன் அஞ்சற்க என்றவர், பின்னர்ப் பிரிந்து செல்வாராயின் , அவர் நின்னைப் பிரியேன்
என்று கூறியதை உண்மையென நம்பிய நம்மீது குற்றம் உண்டோ..?
“இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்
பொருந்து மலரன்ன என் கண் அழ
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே.” ----ஐங்குறுநூறு.
நாணல்,
கரிய நிரமுடைய தண்டான் கோரையை ஒத்த செருந்தியோடு கரும்பினைப் போலக் காற்றால்
அலைப்புண்டு சுழலுதற்கு இடமான ஊரையுடையவன், நின்னைப் பிரியேன்
என்று வாக்குறுதி அளித்து, என்னுடன் கூடியிருந்து, பின்னர் அது பொய்க்குமாறு, இணைந்த மலர்களை ஒத்த என் கண்கள்
அழுமாறு பிரிந்தான் அல்லனோ..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக