திருக்குறள்
-சிறப்புரை
:1304
ஊடி
யவரை
உணராமை
வாடிய
வள்ளி
முதலவரிந்
தற்று.------ க ௩0 ௪
தம்மொடு ஊடியவரை ஊடல் தணித்துக் கூடிமகிழாது, மனம் வெறுத்து வருத்துதல், நீரின்றி வாடிய கொடியை வேருடன் பறித்து எறிவதைப் போன்றது.
“ காமம் கடையின் காதலர்ப் படர்ந்து
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி
ஒருபாற் படுதல் செல்லாது ஆயிடை
அழுவம் நின்ற அலர்வேர்க் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்
பெயர் தரப் பெயர்ந்தாங்கு
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சு.__-குறுந்தொகை.
தோழி…!
தலைவர் இருந்த என் நெஞ்சம், காமம் பெருகி அலைதலுற்றுக்
காதலரை நினைத்து அவரிடம் செல்லும் ; நாம் அவரைத் தனியே விடுத்துவரத்
துணியின், நெஞ்சு வறுத்தமுற்று நம்முடன் இருப்பதாகும்.
கழிக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலத்தில் மண்ணில் பிடிப்புவிட்டு வேருடன்
நெகிழ்ந்த தாழை, கடல் வெள்ளம் கழிமுகம் நோக்கி ஏறும் நிலையில்
கரையில் ஒதுங்கி, அவ்வெள்ளம் மீண்டும் கடலுக்குள் புகுந்த பொழுது,
தாழை, உடன் பெயர்ந்து வந்தாற்போல, என் நெஞ்சு அவ்விரண்டனிடையில் என்னுடனாவது அவருடனாவது ஒரு பகுதியில் நிளைபெறாது
வருந்தி நிற்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக