திருக்குறள்
-சிறப்புரை
:1328
ஊடிப்
பெறுகுவங்
கொல்லோ
நுதல்வெயர்ப்பக்
கூடலில்
தோன்றிய
உப்பு. ---- க ௩உ ௮
இவளின் நுதல் வியர்க்க, யாம்
கூடிக்களித்த இன்பத்தை மேலும் ஒருமுறை
அவளுடன் ஊடி… கூடிப் பெறுவோமோ..?
“வன்புரைத் தக்க சாயலன் என நீ
அன்புரைத்து அடங்கக் கூறிய இன்சொல்
வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு
அமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பின்
வண்டிடைப் படாஅ முயக்கமும்
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே.” ---அகநானூறு.
தோழி…!
நினது உயர்வுக்கு ஏற்ற மென்மைத் தன்மையன் என, நீ
அன்பால் உரைத்து என் மனம் அமைதியுறக் கூறிய இனிய சொற்களெல்லாம் உண்மையாயின.
தன்னை விரும்பியவர்க்கு அமிழ்தம் போன்ற இனிய நறிய மாலையையுடைய தன் மார்பின்கண்ணே,
வண்டு இடையில் பொருந்தலாகாத நிறைந்த முயக்கமும் நீங்காத காதலும் முதல்நாள்
கண்டபொழுது உண்டான இன்பம் போலச் சிறந்திருந்தன,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக