தொல்தமிழர் அறிவியல் - 11
எந்த
ஒரு கண்டுபிடிப்பும் ஒரு காலத்தில் கருத்தாக
இருந்ததே; பின்னர், அக்கருத்துக்கள் அறிவியலாக
மெய்ப்பிக்கப்படுகின்றன. தமிழில்
இவ்வளவு அறிவியல்
சிந்தனைகள் இருந்தும்
பின்னாளில் சிந்திக்கும்
திறனற்ற படிப்பாளிகளால் அறிவியல் கண்டுபிடிப்பாகாமல் போய்விட்டது. சான்றாக – 1916இல் பாரதி
கூறினார் சந்திரமண்டிலத்தியல் கண்டு தெளிவோம் _ என்று, எந்தத் தமிழன்
இக்கூற்றை அறிவியல் சிந்தனை
என்று ஆராய்ச்சி
செய்தான். ஆனால் பாரதியின் அறிவியல்
சிந்தனை இரஷ்யக்காரர்களால்
1961 இல் அறிவியல்
கண்டுபிடிப்பாக மெய்ப்பிக்கப்பட்டதே.
ஒரு
கருத்தை – அறிவுக் கற்பனையை அறிவியல்வழி
மெய்ப்பிக்க வேண்டியது
நமது கடமை;
தமிழ்ப்புலவன் கூறினான்
என்று . மேதாவிகள் சுயசிந்தனை இல்லாது,
ஆங்கில மோகத்தால்
அறிவுஜீவிகளாக வேடம்
தரித்துக்கொண்டனர். ஒரு
கருத்து அறிவியல்
கண்டுபிடிப்பாக மாற
பல காலம்
ஆகும். பெரும்பாலான கண்டுபிடிப்புகள் தற்செயலாக
நிகழ்ந்தவைதாம். 1831இல்
மின்சக்தி கண்டுபிடிக்கப்பட்டது.
1856 இல் மின்
உற்பத்திக்கருவி
கண்டுபிடிக்கப்பட்டது. அந்த
மின் ஆற்றலைப்
பயன்படுத்த 25 ஆண்டுகள்
ஆயின. 1879 இல் தான் மின்சார
விளக்கு (பல்ப்) கண்டுபிடிக்கப்பட்டது.
உலகில் 18, 19,
20 ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல் புரட்சி நடந்தேறியது.
கலைகள் விஞ்ஞானமாக
மலர்ந்தன. இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியர்
லியோனர்டோ டா
வின்சி (1452 – 1519) வரைந்த
பல ஓவியங்கள்
20 ஆம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்புகளாக வடிவம்
பெற்றன. 1925 இல் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சியை இன்று நாம் எதற்குப்
பயன்படுத்துகிறோம் ? சிந்தித்துப்பாருங்கள்!
தொல்காப்பியம் சுட்டும்
“ அகரமுதல் னகர
இறுவாய் “ ஆகிய எழுத்துக்களிலும் அவ்வெழுத்துக்களால் வார்க்கப்பட்ட சொற்களிலும் அவை
புலப்படுத்தும் பொருள்களிலும்
பொதிந்துள்ள அரிய
அறிவியல் நுட்பங்களைப்
பல்துறை சார்ந்த
அறிஞர்களோடு கலந்துரையாடித் தொல்காப்பியரின் - தொல்காப்பியரின் வழிவந்த
சான்றோர் பெரு
மக்களின் நுண்ணறிவை-அறம் சார்ந்த
அறிவியல் அறிவை உலகுக்கு உணர்த்த வேண்டியது
தமிழர்தம் கடனாம்
என்பதை மறவற்க.
இவண்
இரெ. குமரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக