செவ்வாய், 12 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -59


தன்னேரிலாத தமிழ் -59

அறிவது அறிந்து அடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகு உவப்பச் செய்துபெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.” --- நாலடியார்.

 அறிய வேண்டியதைத் தெளிவாக அறிந்து, பொறுமையைக் கடைப்பிடித்து, அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி, செய்யத்தக்க செயலை உலகோர் விரும்புமாறு செய்து, அதனால் பெறும் பயனால் மகிழ்ந்து வாழும் இயல்புடைய பெருமக்கள், எக்காலத்திலும் துன்பத்துடன் உயிர் வாழ்வதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக