தன்னேரிலாத தமிழ் –412: ஆல்பர்ட் சுவைட்சர் – இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்,”
ஆல்பர்ட் சுவைட்சர் – இந்தியச் சிந்தனையும் அதன் வளர்ச்சியும்,” இந்திய மக்களிடையே பண்டைக் காலத்திலிருந்தே பிற உயிர்கள் அனைத்திற்கும் அன்பு காட்டி உதவும் அறக்கொள்கை …. இருந்து வந்த்தை இந்தியப் பண்டைய இலக்கியங்களிலும் காணும் கதைகளிலிருந்தும் அறிகின்றொம்.
(
உலகில் பிற உயிர்களிடத்து அன்பு காட்டிச் செயல்படுவதை……………. அவ்வளவாக வலியுறுத்தாத மனுதர்ம சாத்திரம்
போன்றவற்றிலிருந்து மாறுபடும் ) குறளில் உலகையும் வாழ்க்கையையும்
வெறுத்து ஒதுக்கும் போக்கு (…….) பரவலாக்க் காணப்படுவது அல்ல.
எங்கோ ஓரிரு இட்த்தில் வேண்டுமானால் இருக்கலாம்.
“பிராமணீயம், புத்த மதம்,
பகவத்கீதை போன்றவற்றைப்போல் இம்மை மறுமைப் பயன் கருதியே அறநெறியில் நிற்றல்
வேண்டும் என்ற வாணிக்க் கொள்கையைக் குறள் வலியுறுத்துவது இல்லை. நல்லது செய்வதே தக்கது என்ற உணர்வினாலேயே நல்லது(அறம்)
செய வேண்டும் என்று குறள் கூறுகிறது(குறள்கள்
222,211)ம்பகவத்கீதையோ கருமம் செய்து கொண்டிருப்பது பிரபஞ்சநியதி என்று
வறட்டுத்தனமாக வலிந்து கூறுகிறது. ஆனால், என்ன வியப்பு, குறளோ மனிதன் உழைப்பதும் ஈட்டுவதும் பிறருக்கும்
பிற உயிர்களுக்கும் அவன் நன்மை செய்வதற்காகத்தான் என்று சாற்றுகிறது.(குறள்கள் 81,212) பகவத்கீதைப்படி கடமை ஜாதிக்குத் தக்கபடி
வேறுபடும். குறளோ மக்கள் அனைவரும் ‘நல்லவை
செய்தொழுக கூறுகிறது’.”(பெளத்தமும் கீதையும் போலப் பற்றின்மை,
வெறுப்பின்மை, கொல்லாமை, அகிம்சை ஆகியவற்றையும் குறள் வலியுறுத்தினாலும்கூட அதே சமயத்தில்) குறள் அதிகமாக வலியுறுத்துவது அன்பும் அருளுமேயாம் (………………………) காண்க குறள்கள் 72,78, 79, 103, 226, 241.”அறநெறிசார்
உலக வாழ்க்கை இலட்சியத்தைத் திறம்படச் சுட்டுகிறது குறள். மனிதனின்
தனிமனித வாழ்க்கைபிற உயிர்களோடும் உலகத்தோடும் உறழும் அவன் வாழ்க்கை ஆகியவற்றில் கைக்கொள்ளவேண்டிய
நெறிகளைக் குறள் வியத்தகு பண்புடனும் சால்புடனும் நடைமுறைக்கு உகந்த வகையில் வகுத்துள்ளது.(…………….)
உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இவ்வளவு சிறந்த ஒளிமயமான அறவுரை வாசகங்களை
வழங்கும் நூலைக் காண இயலாது;(குறள்கள் 92, 105, 108,
121, 159, 162, 216,298,319, 578, 594, 628, 757, 782, 931, 973, 999, 1007, 1024,
1032)
”ஆக கிறித்துவ ஊழித் தொடக்கக் காலத்திலேயே இந்திய
மக்கலிடையே உலக வாழ்க்கையிடமும்
உயிர்களிடமும் பண்பும் அன்பும் காட்டும் ஒரு தன்மை இயல்பாக இருந்து வந்துள்ளதைக் குறளிலிருந்து
அறிகிறோம். பிராமணியம் பெளத்தம், பகவத்
கீதைசார் இந்துமதம் ஆகியவற்றின் கோட்பாடுகளில் இல்லாத்து அது.ஆனால் கீழ்ச்சாதியிமரிடமும் சாதாரண மக்களிடமும் தோன்றி மக்களோடு மக்களாக வாழ்ந்த
சிறந்தசமயப் போதகர்கள் மூலமாக அத்தன்மை மெது மெதுவாக நாளடைவில் இந்து மத்த்தில் இடம்பெறலாயிற்று.
– ஆல்பர்ட் சுவைட்சர் : இந்தியச் சிந்தனையும் அதன்
வளர்ச்சியும் Indian Thought and its develaoment :1936. (மொ.பெ. பி.இராமநாதன்)
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக