இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…66.
அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை
(நறுந்தொகை. )
”கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டின்
கடும்புலி வாழுங் காடு நன்றே.”
தன்
குடிமக்களை வாட்டி வதைத்து வரியாகப் பெரும்பொருள் ஈட்டும் கொடுங்கோல் மன்னன் ஆட்சி
செய்யும் நாட்டில் வாழ்வதைவிடக் கொன்றுதின்று வாழும் கொடும்புலி வாழும் காட்டில் வாழ்வது
நல்லதே.
‘ கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்
படுங்கதிர் அமையம் பார்த்திருந்தோர்…” –இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்:
13.
கொடுங்கோல்
அரசன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் அவன் என்று செத்து ஒழிவான் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதைப்போல, வெம்மையான கதிரவன் மறையும் பொழுதை அவர்கள் (கோவலன்,
கண்ணகி, கவுந்தியடிகள்) ஆவலுடன் எதிர்நோக்கி
இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக