இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…81.
சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
“எருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலை அளவு நின்றமுலை மாதே மதியின்
கலை அளவு நின்ற கதிர்.”
சுரக்கும் மலை அளவு நின்ற முலை மாதே…! ஒளிரும் கதிர்களைக் கொண்ட நிலவும், தன்னுடைய வளர்ச்சிக்கும்
தேய்வுக்கும் தக்கவாறுதான் ஒளியைத் தரும். அதுபோல, வாரி வழங்கும் வள்ளல் குணமுடைய மேன்மக்களும் தம்மிடத்துள்ள
செல்வ வளத்திற்கும் , குறைவுக்கும் தக்கவாறே பிறர்க்குக் கொடுத்து உதவுவர்
.
“நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே.” –மாடலன் மதுரைக் குமரனார், புறநானூறு
: 180.
ஈர்ந்தூர்
கிழான், நாள்தோறும் தொடர்ந்து கொடுக்கும் செல்வ வளம் உடையவன் அல்லன் ; ஆயினும் இரந்தோர்க்கு
இல்லை என மறுக்கும் சிறுமை உடையவனும் அல்லன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக