செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 147. அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி .

 

சான்றோர் வாய் (மைமொழி : 147. அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .

 

கலையும் அறிவியலும்.

கலையும் அறிவியலும் ஒன்றினை ஒன்று சார்ந்து இணைந்திருப்பவை. கலை வித்து, அறிவியல் மரம். கலையும் அறிவியலும் கணவனும் மனைவியும் போல  இவ்விருவர்தம் வாழ்க்கைச் சிறப்பு  கூட்டுறவையும் பிரிவையும் பொறுத்திருக்கிறது என்பார் ஜான்பால், (Arts anad Science : Husband anad wife, the life depends upon their separation  and conjuction.)

 

 வாழ்க்கையின் சிறப்பு இணைந்திருப்பதிலேயே இருப்பதைப்போன்று , கலையும் அறிவியலும் இணைந்தே இருத்தல் வேண்டும். மேலை நடுகளில்  அறிவியல் வளர்ந்த அளவிற்கு வாழ்வியல் வளரவில்லை ; இந்தியாவில் வாழ்வியல் வளர்ந்த அளவிற்கு அறிவியல் வளரவில்லை.

 ”அறிவியலற்ற கலைகள் பயனற்றது ; கலையற்ற அறிவியல் ஆபத்தானது.”

 

லைசியம்: (Lyceum)

அறிவியலின்  தந்தை என்று  ‘தாந்தேயல்’ பெயர் சூட்டப்பெற்ற அரிஸ்டாட்டில் (கி.மு. 384 – 322)  மிகச் சிறந்த கலை ஞானி, அறிவியல் மேதை அவரால் தொடங்கப்பெற்றதுதான் லைசியம் என்னும் கல்விச்சாலை. இங்கு அறிவியல் வளர்க்கப்பட்டது , அறிவியல் கோட்பாடுகளும் உருப்பெற்றன.

 

”1662 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அரசு ஆணைப்படி நிறுவப்பட்ட ”ராயல் சொசைட்டி’  எனப்படும் வேத்தியல் கழகம் அறிவியலை  விருத்தி செய்வதற்கென அமைந்தது.

 முதலில் மெய்யியலும், பின்னர் அறிவியலிலும் தனிப் புதுமையுடைய முதன்மையான பங்களிப்புச் செய்தோரே  சிறப்பு உறுப்பினர்களாக்கப்பட்டனர்.”   மெய்யியலும் அறிவியலும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது இக்கழகத்தின் நோக்கமாகும்.

 

ஆல்பிரடு நோபெல் (Alfred Nobel.)

 ஆல்பிரடு நோபெல் –(1833 – 1896)  சுவீடன் நாட்டு விஞ்ஞானி வெடிபொருளைக் கண்டுபிடித்தார். அவ்வெடிபொருள் ஆக்க வேலைகளைக் காட்டிலும் அழிவு வேலைகளுக்கே இது பெரிதும் பயன்பட்டது, அதனால் இவரை ”மரண வியாபாரி” என்று மக்கள் தூற்றினர்.  மனம் நொந்து வருந்தினார் ஆல்பிரடு நோபெல் .  1901 இல்  இவரின் பெயரால்  நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இவர் தேர்ந்தெடுத்த  துறைகள் ஐந்தனுள் ‘இலக்கியமும்’ ஒன்று.

1946 இல் தொடங்கப்பட்ட யுனெஸ்கோ கல்வி அறிவியல்  மற்று,ம்  பண்பாட்டு நிறுவனம், கல்வி, அறிவியல், பண்பாடு இணைந்த மக்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது

கலையில் அறிவியல் :

அரிஸ்டாட்டில் முதல் அப்துல்கலாம் வரை விஞ்ஞானிகளில் பெரும்பாலோர் கலை ஆர்வம் கொண்டவர்களே.

இலக்கியவாதிகளைப் போலவே விஞ்ஞானிகளும் அகநோக்கு (subjective ) புற நோக்கு (objective) தத்துவம் (philosophy.)  முன்னேற்றச் சிந்தனை (progressive thinking) ஆகியவை பொதுவாகும்; இக்கூறுகள் கலைகளையும் அறிவியலையும் சார்புடையதாக்குகின்றன.

 

கலைஞர்களை வெறும் படைப்பாளிகள் என்று கருதக்கூடாது, அவர்தம் ஆக்கங்களில் இடம்பெறும் அறிவியல் சிந்தனைகள் பல கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக அமைகின்றன. இயற்கையின் ஆற்றலை அறிவியல் முறையில் ஆராய்ந்தவர்கள் கி.மு. 4இல் அரிஸ்டாட்டிலும், கி.மு. 5இல் பித்தகோரசும், கி.பி. 150இல் கிளாடியஸ் தாலமியும் உலகைத் தத்துவ முறையில் விளக்கினர்.

…………………..தொடரும்……………….

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக