சான்றோர் வாய் (மை) மொழி : 149. அறிவியல்
சிந்தனைகள் - அறிவியல் புரட்சி .கலையும்
அறிவியலும்.
கலையும் அறிவியலும் :
விஞ்ஞானிகளின் கலை ஞானம்
அளவிடற்கரியதாகும்.
கோபர் நிகஸ் – 1473 – 1543. போலந்து நாட்டைச் சேர்ந்த
வானியல் அறிஞர். இவர் சிறந்த கவிஞர், ஓவியர், இவர் எழுதிய அறிவியல் நூலின் பெயர் –
‘புரட்சிகள்’ என்பதாகும்.
கெப்ளர் – 1571 –
1630.
இவர் செர்மானிய விஞ்ஞானி.
கோள்களின் இயக்கம் குறித்து ஆராய்ந்து எழுதிய நூலின் பெயர் “ கனவு” என்பதாகும். தான் கண்டறிந்த அறிவியல் உண்மைகளை ஒரு கதையாக எழுதியிருந்தார்.
கலிலியோ – 1564 – 1642.
இவர் தமது ஆய்வுரைகளை
உரையாடலாக அமைத்திருந்தார். “ இரு முக்கியமான
அமைப்புக் கொள்கைகள் பற்றிய உரையாடல் ‘ என்பது
அந்நூலின் பெயர்.
19833 ஆம் ஆண்டு
இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சந்திரசேகர் தன்னுடைய ஆய்வுக்கட்டுரைக்கு
“உண்மையும் அழகும் “ என்று பெயரிட்டிருந்தார்.
மேற்சுட்டியுள்ள சான்றுகள் கலையார்வம் விஞ்ஞான மனத்தை வளப்படுத்தியது
என்ற உண்மையும் கலையாக வளரும் விஞ்ஞானம் முறையான அறிவு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது இனிதே விளங்கும்.
அறிவார்ந்த கலைகளின் அடிப்படையிலேயே கண்டுபிடிப்புகள்
நிகழ்கின்றன. தஞ்சை பெரிய கோவிலும் எகிப்து பிரமிடுகளும் கலை சார்ந்த விஞ்ஞானப் படைப்புகளே.
கடந்த நூற்றாண்டுகளில் கலைகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் நெருங்கிய உறவு இருந்தது என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
விஞ்ஞானத்தின் விளைவுகள் :
விஞ்ஞானத்தின்
விளைவுகளை மதிப்பிட்டால்தான் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்க முடியம். கடந்த 300 ஆண்டுகளாக
விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வருகிறது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஆகிய ஐம்பெரும்
பூதங்களின் சேர்க்கையால் ஆகிய இவ்வுலகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்துள்ளன.
இயற்கையை வெல்ல
வேண்டும் என்ற விஞ்ஞான வேகம் ஒரு நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது என்பதை யாவரும்
அறிவர்.
…………………..தொடரும்……………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக