நற்றிணை – அரிய
செய்தி – 74 - 76
புணர்ச்சி அழகூட்டும்
…………………….. நன்மலை நாடன்
புணரின் புணருமார் எழிலே பிரியின்
மணிமிடை பொன்னின் மாமை சாய என்
அணிநலம் சிதைக்குமார் பசலை ……..
மாறோக்கத்து நப்பசலையார். நற். 304 : 4 – 7
தோழி ! தலைவன் வந்து
புணர்ந்த பொழுதெல்லாம் எனக்கு நல்ல அழகு உண்டாகியது; அவன் என்னைப் பிரிந்த பொழுது நீலமனி
இடையே இருக்கும் பொன்னைப் போல மாந்தளிர் நிறம் போன்ற என் மேனியின் அழகு அனைத்தும் கெடுமாறு
பசலை நோய் படர்ந்தது.
நற்றிணை – அரிய
செய்தி – 75
பொறி அழி பாவை
…………………………. நல்வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி
நெடிது நினைத்து
ஆகம் அடைந்தோளே …………..
எயினந்தை மகன் இளங்கீரனார் . நற். 308 : 6 – 8
அவள் சிறந்த சித்திரத்
தொழில் அமைந்த பாவையொன்று இயந்திரம் அற்று விழுந்தாற் போலக் கலங்கி நெடும்பொழுது நினைந்து
நின்று என் மார்பின் மீது சாய்ந்து விழுந்தாள். ( இயந்திரம் அமைக்கப்பெற்ற (பொம்மை)
பாவையா?
நற்றிணை – அரிய
செய்தி – 76
இளமை திரும்புமா..?
முதியோர் இளமை அழிந்தும்
எய்தார்
வாழ்நாள் வகை அளவு அறிஞரும் இல்லை
முப்பேர் நாகனார். நற். 314 : 1 – 2
ஒரு காலத்தே முதுமையை
அடைந்தவர் மறுபடியும் அழிந்த இள்மையை எய்துவது என்பது இல்லை ; அதைப்போலத் தம் வாழ்நாள்
கால அளவு இன்னதென்பதையும் வரையறுத்துக் கூறுவார் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக