திங்கள், 12 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 10 - 11

கலித்தொகை – அரிய செய்தி – 10 - 11
ஈன்ற பொழுது……
 தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்
 அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை…
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 29 :  1 - 2
  கருப்பம் கொண்ட காலத்துப் பிறக்கும் வேட்கையாகிய நோய் ( மசக்கை) ஒருத்தியின் இளமை அழகைக் கெடுத்தது மட்டுமின்றி அவள் மிகவும் வருந்துமாறும் செய்தது ; அதுகண்டு வருந்திய சுற்றத்தார் – அவள் ஒரு புதல்வனை ஈன்றதும் மகிழ்ந்து போற்றினர்.
கலித்தொகை – அரிய செய்தி – 11
கத்திரிகை
 எஃகு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல்
மைஅற விளங்கிய துவர் மணல் …..
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 32  :  1 - 2

 நீர் வடிந்து போனபின் தோன்றிய கருமணல் -’ கத்திரிகையால் ஒழுங்கு செய்யப்பெற்ற  - கார்மேகத்தின்  அழகுடைய மகளிரின் கூந்தலைப் போலத் திகழ்ந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக