கலித்தொகை – அரிய
செய்தி – 10 - 11
ஈன்ற பொழுது……
தொல் எழில் வரைத்து
அன்றி வயவு நோய் நலிதலின்
அல்லாந்தார் அலவுற ஈன்றவள்
கிடக்கை…
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 29 :
1 - 2
கருப்பம் கொண்ட காலத்துப்
பிறக்கும் வேட்கையாகிய நோய் ( மசக்கை) ஒருத்தியின் இளமை அழகைக் கெடுத்தது மட்டுமின்றி
அவள் மிகவும் வருந்துமாறும் செய்தது ; அதுகண்டு வருந்திய சுற்றத்தார் – அவள் ஒரு புதல்வனை
ஈன்றதும் மகிழ்ந்து போற்றினர்.
கலித்தொகை – அரிய
செய்தி – 11
கத்திரிகை
எஃகு இடை தொட்ட கார்க்
கவின் பெற்ற ஐம்பால் போல்
மைஅற விளங்கிய துவர் மணல் …..
பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 32
: 1 - 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக