சனி, 8 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 170-அறிவியல் சிந்தனைகள்: சாக்ரடீஸ் , Socretes –கி.மு. 469 – 399.

 

சான்றோர் வாய் (மைமொழி : 170-அறிவியல்

சிந்தனைகள்: சாக்ரடீஸ் , Socretes –கி.மு. 469 – 399.

 

 உண்மை உயிரினும் பெரிதுநஞ்சுண்டபோதும் உண்மை பேசியவர்ஏடு எடுத்து எழுதவில்லைதெருவோரப் பரப்புரைபல அறிஞர்களை உருவாக்கிய அறிஞர் ஏன்எப்படி …? என்ற வினாக்களைத் தொடுத்து விடையங்களை விளக்கியவர்தான் சொல்லும் நெறிகளைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்துக் காட்டியவர் -  கொள்கைக்காக வாழ்ந்தவர்.

 

 ஏதென்ஸ், பல அறிஞர்களைக் கண்டதுவணிக மையம்செல்வச் செழிப்புபண்பாட்டுக் கலப்பு ஏதென்ஸ் சிந்தனைக் களமாக விளங்கியது பேரண்டத்தின் தோற்றம் இயல்பு பற்றி மனிதன் சிந்திக்கத் தொடங்கிய இடம்.

 

கல்வி கேள்விகளில் சிறந்த அறிஞர்கள் இவர்கள் நடமாடும் பள்ளிக்கூடங்கள்வாத வல்லுநர்கள்அஞ்சா நெஞ்சம் உடையவர்கள் இவர்கள் எழுப்பும் வினாக்களைக் கண்டு  அரசும் சமயங்களும் அஞ்சினஇந்த ஏதென்சில் இளைஞர்களுக்குத் தத்துவத் தாகம் ஏற்படச் செய்த சிந்தனையாளர் சாக்ரடீசு . 

இவருடைய சிந்தனைகளை இவர் மாணவர்  தன் நூலில்  (உரையாடல் ) விளக்கியுள்ளார். சாக்ரடீசு எளிய குடும்பத்தில் பிறந்தவர் ; படையில் பணிபுரிந்தவர்.

 

சாக்ரடீசுஅறிவியல் சிந்தனைகள் :

சாக்ரடீசு ஆற்றிய உரைகளில் அதிக ஈடுபாடுகொண்ட இளைஞர்கள் அவரைச் சுற்றி வட்டமடித்தனர்; இவருடைய கருத்துகளில் முரண்பட்டவர்களும் இருந்தனர்.

 

ஈடும் எடுப்பும் இல்லா நற்பேரறிஞன் சாக்ரடீசு-” என்பது கிரேக்கநாட்டுத் தெய்வ வாக்கு,

 

 எனக்கு எதுவும் தெரியாது என்பதே எனக்குத் தெரிந்த ஒன்று

உன்னையே நீ அறிவாய்..”

 சாக்ரடீசின் உயர்ந்த கோட்பாடு அறியாதன பல உண்டு எனப் பலரை அறியச் செய்தவர்.

 

மனிதனைப் பற்றிய சிந்தனையே  முதன்மையானது “ –என்றார்.

ஏதென்ஸ் நகரில் நிலவிய  தனிமனித தத்துவம்  சமுதாய அழிவை நோக்கியது. ‘வழிபாட்டு உரிமை  என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கடவுளர்கள் கற்பிக்கப்பட்டனர். மதம்/ ,சடங்குகள் பெருகின. மனித மனத்தில் நிலவும் அச்ச உணர்வை மூலதனமாகக்கொண்டு மதத் தலைவர்களும் ஆட்சியாளர்களும் வாழ்ந்தனர்.

 

நேர்மையே நற்பண்புநற்பண்பே அறிவுஉலகியல் பொருள்களிலும் போக்கிலும் வாழ்க்கை நடப்பிலும் வேறுபாடுகளும் முரண்பாதுகளும் நிறைந்திருக்கக் காணலாம். இவ்வேறுபாடுகளை நீக்கி எல்லாவற்றுக்கும் அடிப்படையாக மாறாது தங்கிநிற்கும் பொதுத் தன்மையைக் காணவேண்டும். – என்பது சாக்ரடீசின் தத்துவம்.

அரசியல் தத்துவப் புரட்சி:

 கைகளை உயர்த்தும் கும்பல் ஆட்சி முறையை வெறுத்தார்.

அறிஞர்கள் நேர்மை என்னும் நற்பண்பு நிறைந்தவர்கள் அவர்கள் தாம் ஆளவேண்டும். சிந்தனைத் திறனும் அறிவுக்கூர்மையும் இல்லாதவர்கள் அறிஞர்கள் வகுக்கும் சட்ட அமைப்பிற்குள் இருந்து ஆளப்படுதல் வேண்டும்” சாக்ரட்டீசின்அறிஞர்களின் ஆட்சிஅரசியல் தத்துவப் புரட்சியாகும்.

>>>>>>>>>>>>சாக்ரடீசு >>>>>>>>>>தொடரும் >>>>>>>

அன்புடையீர், வணக்கம் : இத்தொடர் தொடரும் மீண்டும் மார்ச்சு 16ஆம் நாள் சந்திப்போம்….!

 

வெள்ளி, 7 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 169-அறிவியல் சிந்தனைகள். ஹெராக்லிடஸ் . Heraclitus – கி.மு. 535 – 475.

 

சான்றோர் வாய் (மைமொழி : 169-அறிவியல்

சிந்தனைகள். ஹெராக்லிடஸ் . Heraclitus – கி.மு. 535 – 475.

இவர் எஃபிசஸ் என்ற அரசபரம்பரையைச் சேர்ந்தவர். தன் உடன்பிறப்பிற்காக தன் அரசுரிமையைத் துறந்தவர். மாற்றத்திற்கும் இயக்கத்திற்கும் அதிகமான வாய்ப்புடைய நெருப்பே  இயற்கையின் முதல் மூலகம் எனக்கருதினார். நெருப்பு உண்டாக்கப்படுவதில்லை ; அழிக்கப்படுவதில்லை , என்றும் உள்ளது. எல்லாப்பொருள்களும் அவற்றின் பண்புகளும் அதனதன் எதிர்மறையாக மாறிக்கொண்டிருக்கின்றன.

வெப்பம் × குளிர் -  பிறப்பு × இறப்பு -  உயர்வு × தாழ்வு, இவ்வெதிர்மறை மாற்றம் இடையீடன்றித் தொடர்ந்து நடைபெறும் இயற்கை நிகழ்வே என்றார்.

…………………………தொடரும் ………………..

வியாழன், 6 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 168-அறிவியல் சிந்தனைகள். அனாக்சிமெனஸ் : Anaxi Meness-கி.மு. 588 -525.

 

சான்றோர் வாய் (மைமொழி : 168-அறிவியல்

சிந்தனைகள். அனாக்சிமெனஸ் : Anaxi Meness-கி.மு. 588 -525.

அனாக்சிமேண்டரின் மாணவர். பொருள்கள் அனைத்தும் காற்றிலிருந்து தோன்றி காற்றிலே முடிகின்றன, என்பது இவரது கொள்கை. காற்று அளவிறந்தது ; எங்கும் நிறைந்திருப்பது ; அழியாதது ; காற்றின் செறிவிற்கேற்பவும் அழுத்தத்திற்கேற்பவும் மேகம், நீர், நெருப்பு,  நிலம் எனப் பொருள்கள் பரிணாமிக்கின்றன, என்றார்.

…………………………….தொடரும்…………………….

 

சான்றோர் வாய் (மை) மொழி : 167-அறிவியல் சிந்தனைகள் . Anaxi Mander – கி.மு. 610 – 546.

 

சான்றோர் வாய் (மைமொழி : 167-அறிவியல்

சிந்தனைகள் .  Anaxi Mander – கி.மு. 610 – 546.

 

தேலிசின் மாணவர்தமது சிந்தனைகளை நூல் வடிவில் தந்தவர். இவர் தேலிசின் கருத்திற்கு முரண்பட்டவர். எந்த ஒரு மூலத்தையும் பேரண்டத்தின் முதற்காரணமாகக் கொள்ளவில்லை.. இப்பேரண்டம் எதிமறைகளின் தொடர்பு என்பது இவர் கருத்து. நீர் × நெருப்பு , வன்மை  × மென்மை என்பன போன்று பகுக்கப்படாத முழுமையான எல்லையற்ற ஒன்று இருக்கின்றது, அந்த ஒன்றே அனைத்திற்கும் மூலகாரணம். எதிலிருந்து தோன்றியதோ அதிலியே அடங்கும். மனிதனின் பரிணாமத்தை முதலில் குறித்தவர் இவரே ; மனிதன் மீனிலிருந்து தோன்றியவன் என்றார்.

…………………………………தொடரும் ……………......

புதன், 5 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 166-அறிவியல் சிந்தனைகள். தேலிஸ் - Thales – கி.மு. 6.

 

சான்றோர் வாய் (மைமொழி : 166-அறிவியல்

சிந்தனைகள். தேலிஸ் -  Thales – கி.மு. 6.

பண்டைய கிரேக்க அறிஞர் எழுவருள் (தேலிஸ், கோலன், பிட்டாலஸ், பியாஸ், சிரியோபுலங். மிசான், சிலான் ) இவரே முதல்வர்.இவர் எகிப்து சென்று வடிவக் கணிதம், வாணிபம் கற்று , கிரேக்கத்தில் தன் பட்டறிவைப் பரப்பினார் என்பர்.

இவ்வுலகம் எதனால் ஆயது என்ற வினாவை எழுப்பிய முதல்வர் இவரே.  இவர் நீரால் ஆனது என்றும் நீரே எல்லாப் பொருள்களுக்கும் மூலகாரணம் என்று கூறினார்.

 கதிரவனும் விண்மீன்களும் வணக்கத்திற்குரிய  கடவுளர் அல்லர். அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்து பார்க்கவேண்டிய நெருப்பின் துகள் என்றார்.

அனைத்தும்ஆன்மா  என்பது தேலிசின் கொள்கை. எல்லாப் பொருள்களுக்கும் உயிர் உண்டு என்னும் இக்கோட்பாடு  ஐலோசோயிசம்எனப்படும்.

Hylozoism

New World Encyclopedia

https://www.newworldencyclopedia.org › entry › Hyloz...

Hylozoism (Greek hyle, matter + zoe, life) is the philosophical doctrine that all matter possess life, or that all life is inseparable from matter.

      

……………………தொடரும்………………….

 

செவ்வாய், 4 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 165-அறிவியல் சிந்தனைகள்: ஹோமர் - Homer – கி.மு. 700.

 

சான்றோர் வாய் (மைமொழி : 165-அறிவியல்

சிந்தனைகள்:  ஹோமர்  -    Homer – கி.மு. 700.

விஞ்ஞானத்தின் வித்து விழுந்த இடம் கிரேக்கம் என்பர்.

கிரேக்கர்களின் தத்துவக் கோட்பாடுகள்  மேலைநாட்டுத் தத்துவக் கோட்பாடுகள் அனைத்திற்கும் வித்தாக அமைந்துள்ளன. கிரேக்கர்களின் சிந்தனை ஆற்றலும் அறிவுத் திறனும் காலத்தால் அழிக்கமுடியாத சிறந்த தத்துவங்களை ஏற்படுத்தின. கிரேக்கச் சிந்தனையாளர்கள் பலரும் உண்மையான த்த்துவ ஞானிகளாக அஞ்சாதஎளிய இனிய வாழ்க்கை நடத்தியவர்கள். சமயச் சார்பில்லாது நடுநின்று சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் பண்டைய கிரேக்கர்கள்.

  தத்துவ உலகின் எல்லாத் திக்கிலும் சாக்ரடீசின் பெயர் எதிரொலிக்கிறது. சாக்ரடீசு பல தத்துவக் கோட்பாடுகளின்  சங்கமம். சாக்ரடீசுக்கு முன் பல சிந்தனைச் சுடர்கள் கிரேக்க நாட்டில் ஒளிர்ந்தன. சாக்ரடீசுக்கு  முன்பிருந்த சிந்தனையாளர்கள் இயற்கையின் பேரார்ற்றலை எண்ணி வியந்தனர். இப்பேருலகின்  தோற்றம் மாற்றம் பற்றிச் சிந்தித்தனர். இபேருலகின் மூலப்பொருள் நீரென்றும் நெருப்பென்றும் காற்றென்றும் கடவுளென்றும் பலவாறு சிந்தித்தனர். எனினும் சிந்தனை உலகில் சாக்ரடீசு ஒரு சகாப்தம்.

ஹோமர்:

 இலியட், ஒடிசி எனும் அரிய காவியங்களை இயற்றியவர். இவர் கவிதையில் ஒளிரும் தத்துவக் கருத்துகள் அறிவியல் நுட்பம் சார்ந்தவை- பின் தோன்றிய கிரேக்கத் தத்துவங்களுக்கு அடிப்படையாக அமைந்தவை. ஹோமருக்குப்பின் கிரேக்கம் பல நாடுகளோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. – பல இன மக்களோடு பழகும் வாய்ப்பு ஏற்பட்டது -  அரசியல் அமைப்பு மாறியதுபுதிய தெய்வங்கள் தோற்றுவிக்கப்பட்டனதத்துவ அறிஞர்கள் பலரும்கடவுள் உண்டுஎன்னும் கருத்துடையோர்இது கிரேக்கத் தத்துவத்தின் தொடக்கக் காலம்.

திங்கள், 3 மார்ச், 2025

கன்பூசியசு -2 சான்றோர் வாய் (மை) மொழி : 164-அறிவியல் சிந்தனைகள் -

 

கன்பூசியசு -2

சான்றோர் வாய் (மைமொழி : 164-அறிவியல்

சிந்தனைகள்  -  கன்பூசியஸ்.

ஓர் அரசியல் வாதி….?

 ஒரு நல்ல அரசுக்கு வேண்டப்படுவது …….

போதுமான உணவு

போதுமான படை பலம் .

பொது மக்களின் நம்பிக்கை. ”

 

மக்களின் நம்பிக்கையே முதன்மையானது அஃதில்லையேல் அரசு இல்லை .

ஆளுவோர் தவறிழைக்கும்போது ஆளும் உரிமையை இழந்து விடுவர்.”

 

கல்வியாளர்:

கல்வி அறிவின் அடிப்படையில் வழங்க வேண்டும். அனைவரும் கல்வி பயில வாய்ப்பளித்தவர்.  ஒரு செய்தியின் ஒரு மூலையை நான் தெளிவாக எடுத்துக்காட்டிய பிறகு மற்ற மூன்று மூலைகளையும் தானாகவே கண்டுபிடிக்க முடியாதவனுக்கு நான் மேலும் கல்வி போதிக்க மாட்டேன்.

 போதனா முறை என்பது மாணவனின் தலைக்குள்  அறிவுகளைத் திணிப்பது அல்ல ;  அவன் சுயமாகச் சிந்திப்பதுதான்.”

 

 அறிவுக்காக அறிவை  அடைதைவிட தன்னைப் பண்படுத்தி வளர்ப்பதற்காக அறிவு பெறுவதுதான் கல்வியின் உண்மையான பயன்.”  

 

 சிந்தனை இல்லாத படிப்பு வீணானது ; படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது.”

சட்டங்களும் தண்டனைகளும் மக்களைத் திருத்திவிட முடியாது .; கல்விக்கு ஈடானது எதுவும் இல்லை.”

 

 தத்துவஞானி :

ஜீன் அல்லது மனித உள்ளம் படைத்திருத்தல், இவரது கொள்கை.ஜீன் என்பது பிறர் மீது அன்பு  செலுத்துதல்.”

 

ஒரு வாலிபன் வீட்டிலிருக்கும்போது பெற்றோர் பக்தியும் வெளியே இருக்கும்போது சகோதர அன்பையும் பயில வேண்டும். அவன் மனப்பூர்வமாகவும் தீவிரமாகவும் எல்லோரையும் நேசிக்க வேண்டும்.

 

மனித ஜீவன்கள் மீது அன்பு செலுத்துவதுதான்  மனிதப்பண்பு ; மனிதர்களைப் புரிந்துகொள்வது விஞ்ஞானம்.,”

 

 இயற்கைவாதி:

மனிதன் இயற்கையோடியைந்து வாழ வேண்டும்.. வானம் உன்னதமான ஆத்மிக இயக்கம் ; அது இயற்கையின் சக்தியே தவிர இறைவன் எனப்படும் ஓர் ஆள் அல்ல ; மக்கள் அனைவரும் வானகத்தின் முன் ஒரு பொது மனித சமுதாயக் கூட்டம்.

கன்பூசியசு ஒரு மாபெரும் சிந்தனையாளர், காலங்கடந்தும் இன்றும் அவர் கொள்கைகள் கோட்பாடுகள் சீனாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அறிவியல் சிந்தனையாளர் 72- வயதில் இயற்கை எய்தினார்.

இவர் எழுதிய நூல்கள் நான்கு .

தொகுத்த பழம்பெரும் இலக்கியங்கள் ஐந்து.

 பதினைந்து ஆண்டுகள் நாடோடியாக அலைந்து திரிந்து மக்களிடையே  கருத்துகளைப் பரப்பினார்.

………………………தொடரும்…………………………

ஞாயிறு, 2 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 163-அறிவியல் சிந்தனைகள் - கன்பூசியஸ் –

 

சான்றோர் வாய் (மைமொழி : 163-அறிவியல்

சிந்தனைகள்  -  கன்பூசியஸ் கன்பூசியஸ் –-கி.மு. 551 – 479.  (Confucius)

 

சீன நாட்டில் தோன்றிய தத்துவஞானி. கடவுள், மதம், ஞானம் என எதையும் இவர் போதிக்கவில்லை.  நடைமுறையில் மனிதன் ஏற்று ஒழுக வேண்டியவைகளை மட்டுமே கூறினார்.

 

அன்புவழி, அறநெறி, மனிதநேயம், சமுதாயம், பண்பாடுமனிதன் வாழ்வதற்கும் வாழ்க்கையாப் புரிந்து கொள்வதற்கும் மக்களைப் பண்படுத்தியவர். திருவள்ளுவரோடு வைத்து எண்ணத்தக்க சிறந்த அறநெறியாளர், சீனத் தத்துவஞானி.

 

 பிறர் உங்களுக்கு எதைச் செய்யக்கூடாது என்று கருதுகிறீர்களோ அதை நீங்கள் பிறருக்குச் செய்யாதீர்கள்.”

வாழ்க்கையைப்பற்றியே உனக்கு ஒன்றும் தெரியாதபோது மரணத்தைப்பற்றி நீ என்ன தெரிந்துகொள்ள முடியும் ? ‘”

 

 இவருடைய மூன்று குறிக்கோள்கள்:

1. அரசுக்குக் கடமையாற்றல்

2. இளைஞர்களுக்குக் கற்பித்தல்

3. சீனப் பண்பாட்டை எதிர்காலச் சந்ததியினருக்குப் பதிப்பித்தல்.

4. மனிதன் மகிழ்ச்சியோடு நெறியோடும் வாழ்வது எப்படி என்பதை கன்பூசியசைப் போல் அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக்கூறியவர் வேறு எவரும் இலர். மனித இனத்திற்குப்  பயனுள்ள முறையில்  இவரைவிட வேறு யாருமே போதிக்கவில்லை.” வால்டேர்.

 

 மேலை நாட்டுத் தத்துவம் மதத்தோடு தொடர்புடையது

 சீனநாட்டுத் தத்துவம் அறிவுக்கலைகளோடு தொடர்புடையது.

 

 சீனத் தத்துவ மூலம் :  யாங்யின் (Yang-Yin ) கொள்கை:

யாங்ஆண்மை  : படைக்கும் ஆற்றல்

யின்பெண்மை : கிரகிக்கும் ஆற்றல்.

(சிவசக்தி : தத்துவம் போன்றது.

 

 கன்பூசியனிசம் – ( Confucianism )

உலகம் முழுவதற்கும் ஓர் ஒழுங்கு ; ஒரு பொது ஒழுக்கம்; ஒரு பொது சமுதாயம் அமைய வேண்டும் அதற்கு உலகப் பொதுத் திட்டம் ஒன்று வேண்டும்.”

 

இதற்கு அடிப்படை  ஒரு பொது அறநெறி மனிதனின் செயல் அந்த அறநெறியோடு இசைந்திராவிட்டால் மக்களும் அரசும்  இயற்கை ஒழுங்கும் குழம்பிக்கிடக்கும்.

 

(கம்பன் விரும்பிய கோசலைநாடு போன்று  பொது நல நாடு- ( Grand Common Wealth )  ஒன்றினைப் படைத்துக்காட்டுகிறார். குடும்பம், அரசியல், சமுகம் ஆகியவற்றில் தனி மனித ஒழுக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

………………………………கன்பூசியசு ……தொடரும்….

 

சனி, 1 மார்ச், 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 162 அறிவியல் சிந்தனைகள் - அறிவியல் புரட்சி . எழுச்சியும் வீழ்ச்சியும். நம்மாழ்வார்,

 

சான்றோர் வாய் (மைமொழி : 162 அறிவியல்

சிந்தனைகள்  - அறிவியல் புரட்சி .  எழுச்சியும் வீழ்ச்சியும்.

 நம்மாழ்வார்,

 

வரலாறு

நம்மாழ்வார்தஞ்சை மாவட்டத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி பார்புரட்டியார் மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர் ஆவார்.(சான்று த.ரெ.தமிழ்மணியின் நம்மாழ்வார் வாழ்க்கைக் குறிப்பு நூல்) இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007 ஆம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர் மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயிமசனோபு ஃபுக்குவோக்காவால் ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார் நம்மாழ்வார்.

எதிர்த்துப் போராடியவை

·         பூச்சி கொல்லிகள்

·         மீத்தேன் வாயு திட்டம், இந்தியா

·         மரபணு சோதனைகள்

·         பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி

·         வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி

·         விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்

களப்பணிகள்

·         சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு[2]

·         இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்

·         60க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவினார்.

·         மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.

·         "தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிட்டார்.

நடைப் பயணங்கள்

·         1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக

·         2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் - அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.

·         2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்

·         2002 - இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.[3]

உருவாக்கிய அமைப்புகள்

·         1979ல் குடும்பம்

·         1990 லிசா (1990 – LEISA Network)[4]

·         1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்

·         இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)

·         நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்

·         வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்

·         தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்

படைப்புகள்

·         தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்

·         உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு

·         தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு

·         நெல்லைக் காப்போம்

·         வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு

·         இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு

·         நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு

·         எந்நாடுடையே இயற்கையே போற்றிவிகடன் வெளியீடு

·         பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு

·         நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு

·         மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு

·         களை எடு கிழக்கு பதிப்பகம்

விருதுகள்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.[5]

இறப்பு

இவர் 2013 திசம்பர் 30 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.விக்கிபீடியா.

அறிவியல் எழுச்சி  என்று இந்தியா முழுவதும் புசுமைப்புரட்சி செய்தவை அத்தனையும் மனிதகுலத்திற்குத் தீங்கு விளைவிப்பவை என்று நாடு முழுதும் வேளாண்விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை குறித்துப் பரப்புரை மேற்கொண்டு  மண்ணையும் மக்களையும் காப்பாற்றினார்.

இன்று நம் நாட்டு மக்கள்  இயற்கை விளைபொருள்களை நாடி ஓடுகின்றனர். நோய் நொடிகளிலிருந்து விடுதலைபெற. கம்பு, சோளம். குதிரைவாலி, சாமை மாப்பிள்ளைச்சம்பா, கருக்கவுணி, தூயமல்லி இன்னபிற அரிசிவகைகளைத் தேடி ஓடுகின்றனர்.

அன்றாடம் வேதியல் கலவைகளைக் கொண்டு உற்பத்தியான பற்பசை,  (கரி இருக்கிறது, சுண்ணாம்பு இருக்கிறது என்றும் ஊட்டசத்து மாவுகள் இன்று சிறுதானிய வகைகளைக் கொண்டு உற்பத்தி செய்கின்றன.)

ஐயா நம்மாழ்வார் தோற்றுவித்த இயற்கை வாழ்வியல் தமிழ் மண்ணில் வேரூன்றி, செழித்து வளர்ந்துவருவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

அறிவியல் மோசடி: செறிவூட்டல்.

இன்று வேளாண் ஆராய்ச்சியாளர்கள் செறிவூட்டல் என்னும் புதிய கண்டுபிடிப்பை  அறிமுகப்படுத்தி இயற்கையை அழித்து வருகின்றனர்.

கொடுமைகள் : நெல்லிக்காயின் அளப்பரிய ஆற்றலை நாம் நன்கறிவோம்; இஃது உயிர் காக்கும் ஒப்பற்றமருந்தும் உணவுமாகும்.  இந்த நெல்லிக்காயைச் செறிவூட்டி பேரிக்காயாக மாற்றிய கொடுமையை என்னென்பேன் ?

மேலும் அரிய நெல் வகைகளை கண்டெடுத்த நெல் செயராமன் இயற்கை வேளாண்மையை நாடு முழுதும் அரும்பாடுபட்டுக்  கொண்டு சேர்த்தார். இந்த அரிய வகை நெற்பயிர்களின் வாழ்நாளைக் குறைக்கப் போகிறார்களாம் ; என்ன கொடுமை இது..?

 ............................................தொடரும்..............................