கலித்தொகை – அரிய
செய்தி – 40 - 41
சங்கப் பாடல்களுள் சிறப்பிடம் பெறும் பாடல்
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
(ஆற்றுதல் - வறுமை உற்றவர்க்கு உதவுதல்)
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
(- போற்றுதல் – இனிது
கூடினாரைப் பிரியாதிருத்தல்)
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
( பண்பு - இயல்பறிந்து
பழகுதல்)
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
(அன்பு - சுற்றத்தாரைச்
சினவாதிருத்தல்)
அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோன்றல்
(அறிவு - அறியாதார் சொல்வதைப் பொறுத்துக்கொள்ளுதல்)
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
( செறிவு – சொன்ன சொல்லை
மறவாதிருத்தல்- காப்பாற்றுதல்)
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
(நிறை – மறைவான(கமுக்கம் – இரகசிய்ம்) ஒன்றைப் பிறர் அறியாது
காத்தல்)
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்
( முறை – உற்றாராயினும்
ஒருபால் கோடாது (குற்றம் கண்டு) உயிரையும் எடுத்தல்)
பொறை எனப்படுவது போற்றாரைப்
பொறுத்தல்
( பொறை – போற்றாரையும் பகையாதிருத்தல்)
நல்லந்துவனார். கலித் . 133 : 6 – 14
கலித்தொகை – அரிய
செய்தி – 41
கூடலிழைத்தல்
கோடு வாய் கூடாப் பிறையை பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ….
நல்லந்துவனார். கலித் . 142 : 24 – 25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக