திருக்குறள்
– சிறப்புரை : 422
சென்ற இடத்தில்
செலவிடா தீதொரீஇ
நன்றின்பால்
உய்ப்பது அறிவு. ~422
மனம்
போன போக்கில் போகாது தீயவற்றினின்று விலக்கி நல்வழியில் செலுத்துவது அறிவாகும்.
“மறுமைக்கு
வித்து மயல் இன்றிச் செய்து
சிறுமைப் படாதே நீர் வாழ்மின் அறிஞராய்.” ~ நாலடியார்.
மறுமையிலும்
இன்பம் பெறுவதற்கான செயல்களை. மயக்கமில்லாமல் தெளிவுடன் செய்து.. துன்பமின்றி அறிவுள்ளவராய்
வாழ முற்படுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக