திருக்குறள்
– சிறப்புரை : 423
எப்பொருள் யார்யார்வாய்க்
கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு.
~ 423
எத்தகைய
பொருள் குறித்தும் யார் ஒருவர் சொல்லக் கேட்பினும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தெளிவு பெறுதலே
அறிவுடைமையாகும்.
“உணர உணரும்
உணர்வு உடையாரைப்
புணரப் புணருமாம் இன்பம் ….” ~ நாலடியார்.
நூலின்
பொருளை உணரத்தக்க வகையிலே உணர்ந்துகொள்ளும் அறிவுள்ளவரை நண்பராகச் சேர்த்துக் கொள்வதனால்தான்
இன்பம் உண்டாகும்.
திருக்குறள் சிறப்புரை கண்டேன். நன்றி.
பதிலளிநீக்கு