திருக்குறள்
– சிறப்புரை : 425
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது
அறிவு.
~ 425
அறிவு
எனப்படுவது உலகத்தைத் தன்வயப்படுத்துவதாக அமைதலாம் அவ்வாறான ஆற்றலுடைய அறிவு மங்குவதும்
இல்லை மறைவதும் இல்லை ; எக்காலத்தும் நிலைத்த
தன்மை உடையதாம்.
“ ஆர்கலி உலகத்து
மக்கட்கு எல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்.” ~ முதுமொழிக்
காஞ்சி.
இவ்வுலகத்தில்
உள்ள மக்கள் எல்லாருள்ளும் உயர்வடைய விரும்புவோன் பிறரிடம் காணப்படும் சிறந்த இயல்புகளையே
பேசப் பழகுதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக