திருக்குறள்
– சிறப்புரை : 426
எவ்வ துறைவது
உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது
அறிவு.
~ 426
உலகத்துச்
சான்றோர் கூறிய அறிவுரையின்படி இவ்வுலகம் எப்படி நடந்து கொள்கிறதோ அப்படியே தானும்
நடந்து கொள்வதே அறிவுடைமையாகும் “ உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்பதறிக.
“ சாம்தனையும்
தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆம்தனையும் காப்பர் அறிவு உடையோர் …..” வாக்குண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக