திருக்குறள்
– சிறப்புரை :527
காக்கை கரவா
கரைந்துன்னும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே
உள.
--- ௫௨௭
காகம், கிடைத்தவற்றை மறைத்துத் தான் மட்டும் உண்ணும் வழக்கம் உடையதன்று
; தன் இனத்தைக் கூவி அழைத்து உண்ணும் பண்புடையது. சுற்றம் சூழ வாழும் அத்தகைய பண்புடையோர்க்கே ஆக்கமும் உளதாகும்.
“
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு
உகிர் நிமிரல் மாந்தி எல்பட
அகல்
அங்காடி அசைநிழல் குவித்த
பச்சிறாக்
கவர்ந்த பசுங்கண் காக்கை “ --- நற்றிணை.
வந்த விருந்தினரைப் போற்றுவதற்காகப் பொன்னாலாகிய தொடியுடைய மகளிர் உணவு
சமைத்தனர், அவ்வுணவில் ஒரு கவளம் எடுத்து முற்றத்தில் பலியாக இட்டனர். கொக்கின் நகம்
போன்ற சோற்றைப் பசிய கண்ணையுடைய காக்கை உண்ணும்.
திருடி உண்ணும் உணவை காக்கை பகிர்ந்து உண்ணாது.
பதிலளிநீக்கு