திருக்குறள்
– சிறப்புரை : 659
அழக்கொண்ட எல்லாம்
அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும்
நற்பா லவை.
--- ௬௫௯
பிறர் கண்ணீர்விட்டு அழுமாறு
தீய வழிகளில் (ஊழல், கொள்ளை வணிகம், திருட்டு…) ஈட்டிய செல்வம் எல்லாம், தாம் கண்ணீர்விட்டுக்
கதறி அழ அழத் தம்மைவிட்டு நீங்கும் ; நேர்மையான வழியில் தேடும் செல்வத்தை இழக்க நேர்ந்தாலும்
பின்னாளில் நல்ல பலனையே தரும்.
”
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.”
–குறள். 283.
களவினால் உண்டான செல்வம் அளவுகடந்து
பெருகுவது போலத் தோன்றி, அளவு கடந்து அழியும்.
நன்று.
பதிலளிநீக்கு