திருக்குறள் -சிறப்புரை
:792
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்.--- ௭௯௨
பலவாறும் ஆராய்ந்து தேர்ந்துகொள்ளாதவன் கொண்ட நட்பு, சாகுவரை துன்பம்
தரும்.
“ நில்லாத காட்சி நிறையில்
மனிதரை
புல்லா விடுதல் இனிது.”
–இனியவைநாற்பது.
தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை
இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக