ஞாயிறு, 19 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1268


திருக்குறள் -சிறப்புரை :1268

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து. ----- ௨ ௬

போர்க்களத்தில் அரசன் வெற்றி பெறுவானாக ; யாமும் மாலைப்பொழுதில் வெற்றி வீரனாக மனைவியைக் கண்டு மகிழ்ந்து  விருந்துண்போம்.

பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்
விருந்து நனிபெறுதலும் உரியன் மாதோ
இருண்டு தோன்று விசும்பின் உயர்நிலை உலகத்து
அருந்ததி அனைய கற்பின்
குரும்பை மணிப்பூண் புதல்வன் தாயே. “ ---ஐங்குறுநூறு.

பெருஞ் சினத்தனாகிய எம் வேந்தனின்  பகைவரால் விலக்குதற்கு அரிய போர்முனை முற்றுப் பெறுமானால், இருண்டு தோன்றும் வானின்கண் உள்ள தேவருகிலுள்ள அருந்ததி போலும் தெய்வக் கர்புடையவளும்தென்னங் குரும்பையின் வடிவுகொண்ட மணிகளைக் கொண்ட கிண்கிணியை அணிந்த எம் புதல்வன் தாயுமாகிய எம் காதலி விருந்தினை எதிரேற்று, அவர்களைபபேணும் பெரிய இன்பத்தினைப் பெறுவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக