சனி, 17 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 164

 

தன்னேரிலாத தமிழ் - 164

560

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.


மன்னன், மக்களைக் காக்கத் தவறுவானாயின் நாட்டில் பசுக்கள் பால்தரா, ஆறுவகைப்பட்ட தொழில்களைச் செய்வோர் தாம் கற்றவற்றை மறந்துவிடுவர். (வேறு தொழில் நாடிச் செல்வர்.)


கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டில்

கடும்புலி வாழும் காடு நன்றே.” ---வெற்றிவேற்கை.


கொடுங்கோலன் ஆளும் நாட்டைவிடக் கொடுமையான புலிகள் வாழும் காடு நல்லதாம்.

1 கருத்து: