தமிழ் முழக்கம் 8- பேராசிரியர் சி. இலக்குவனார்
”தமிழர்களில் கற்றவர்கள் எனப்படுகின்றவர்கள் தமிழினுயர்வை
நிலைநாட்ட முயலாது தம்முயர்வை நிலைநாட்டுவதிலேயே காலங் கழித்து வருகின்றனர்.இந்திய மொழிகளின் தாய் எனத் தகும் தமிழ், ஆரியத்தின்
கொடுங்கோல் பிடிக்கு ஆளாகாது தப்பித்து உயிர் வாழ்ந்து வருகின்றது. தென்பகுதியில் வாழ்வதால் தென்மொழி எனப்படுகின்றது.
இத்தென்மொழித் தன்மையும் நீங்கி இல்மொழியாகி
விடுமோ என்று அஞ்சத்தகுந்த நிலையில் தமிழர்கள் வாழ்கின்றனர். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டும் என்றார் பாரதியார்,
ஆனால் அதன் பிறப்பிடமாகிய இந்நாட்டில் தமிழ் ஓசை மங்கி வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக