களப்பாளனாகிய
களந்தைக் கூற்றுவன் -2
முனைவர் இரெ. குமரன்
களப்பாளில்
இருந்தவர்களே களப்பிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். அறிஞர்
டி.வி. சதாசிவ பண்டாரத்தார் “
களப்பாள்” என்ற சோழ நாட்டு ஊர் ஒன்றில் முற்காலத்தில் வாழ்ந்துவந்த அரசியல் தலைவன் ஒருவன் ‘களப்பாளன்’ என்று சிறப்பித்து வழங்கப் பெற்றமையால் அவன்
வழியினர் களப்பாளன் எனவும் களப்பராயர் எனவும் குடிப்பெயர் பெற்று, பெருமையோடு வாழ்ந்து வருவாராயினர். எனவே தமிழராகிய களப்பாளரும்
ஏதிலராகிய களப்பிரரும் ஒருவரேயாவரென்னும் முடிவு எவ்வாற்றானும் ஒத்துக்கொள்ளத் தக்கதன்று
என்று கூறுகிறார்.
தமிழர்தம்
தொன்மை நிலப்பகுப்பில் மருதமும் ஒன்று. மருத நில மக்களுக்கு களமர்
என்றொரு பெயரும் உள்டு. களமர் என்ற சொல்லுக்கு உழவர் அல்லது வீரர்
என்பதாம். களமர், களவர், கள்வர் ஆகிய சொற்கள் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே வழக்கிலிருந்து
வருகின்றன. கள்வர் என்பது கள்ளர் வகுப்பினரைக் குறிப்பதாகும்
கள்ளர்கள் கருநாடகப் பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு அவர்களிடமிருந்து மகாராட்டியர்
செளத் என்ற வரி வாங்கி வந்தது போல் ஒரு வரியும் வாங்கி வந்திருக்கின்றனர் என்கிறார்
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
சங்க காலத்தில் தமிழகத்தின் வடக்கிலிருந்த வேங்கட நாட்டை அரசாண்ட புல்லி
என்ற அரசர் ‘கள்வர் கோமான் புல்லி’ (அகம்.61.) என்று அழைக்கப்படுகிறார்.. வேங்கடமலை தொண்டையர்க்கு (தொண்டைமான்) உரியது. அறிஞர் மு. இராகவையங்கார்
கள்வர் என்பது களப்பிரரைக் குறிக்கிறது என்கிறார். களப்பிரரும்
பல்லவ அரசர் ஆண்ட தொண்டை மண்டலம் தவிர, சேர சோழ பாண்டிய நாடுகளைக்
கைப்பற்றி ஆண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது……………….தொடரும்………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக