இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…28.
ஒளவையார் இயற்றிய - நல்வழி.
உயர்
குலம் இழி குலம்
“சாதி
யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா
நெறிமுறையின் – மேதினியில்
இட்டார்
பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில்
உள்ள படி.”
“
துன்பப்படுவோர்க்கு கொடுத்து உதவுபவர் உயர் குலத்தார் ஆவர். அங்ஙனம் கொடாதவர் தாழ்ந்த
குலத்தவர் ஆவர்.
உண்மை
நூலில் சொல்லப்பட்ட கருத்தும் இதுவேயாகும்.
ஆதலால் பிறவியினால் உயர்வு தாழ்வு இல்லை.
உரையாசிரியர்
: பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.
இணைப்பு:
“ஈயென
இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன்
என்றல் அதனினும் இழிந்தன்று..” –கழைதின்யானையார், புறநானூறு.204.
எனக்கு
ஏதேனும் உதவி செய் என்று இரப்பது இழிவானது; அப்படி இரப்பவர்க்கு ஒன்றும் கொடுக்காது
இல்லை எனக் கூறுவது அதைவிட இழிவானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக