இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…29
ஒளவையார் இயற்றிய நல்வழி.
உயிரை விட உயர்ந்தது ஒழுக்கம்
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்தவாயினும் ஊழ்
கூட்டும் படயன்றிக் கூடாவாம் – தேட்டம்
மரியதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.”
பல் வேறு வழிகளில் பொருளைத் தேடிச் சேர்த்துவைத்தாலும் நமக்கு எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவுதான் கிடைக்கும், மனமே…! தேடிய பொருள் அனைத்தும் நிலையற்றது. இன்று
உனக்கு ; நாளை இன்னொருவனுக்கு என்பதை மறவாதே. ஆதலால் என்றும் நிலையாக நின்று நல்ல பெயரைப்
பெற்றுத்தருவது நல்லொழுக்கம் ஒன்றே. எனவே ஒழுக்கத்தை உயிரெனப் போற்றுவாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக