இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…32.
ஒளவையார் இயற்றிய நல்வழி.
“ஒருநாள்
உணவை ஒழிஎன்றால் ஒழியாய்
இருநாளைக்கு
ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்நோவு
அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு
வாழ்தல் அரிது.”
வயிறே ..! என்னை ஏன் கொடுமைப்படுத்துகிறாய்..? ஒரு நாளக்கு உணவு கிடைக்கவில்லை
என்றால் இன்று உணவை விட்டுவிடு என்று சொன்னால் விடமாட்டாய் ; உணவு வேண்டுமளவு கிடைத்த போது இரண்டு நாளைக்குச்
சேர்த்து எடுத்துக்கொள் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டாய் ; உணவுக்காக நான் படும் துன்பங்களைச்
சிறிதும் நீ அறிய மாட்டாய் ; ஐயோ…! உன்னோடு வாழ்தல் மிகவும் கொடுமையாக இருக்கிறதே,
நான் என்ன செய்வேன்…?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக