தமிழாய்வுத் தடங்கள் -10 –அகத்தின்
அழகு முகத்தில் தெரியும்.
Scientists Identify 21 Facial Expressions.
தொல்காப்பியர். மெய்யின்கண் நிகழும் மெய்ப்பாடுகள் எட்டு என்றும் இவ்வெட்டின் புறப்புலப்பாடுகள்-8*4=
32 ஆகும் என்பார்.
”நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.-(தொல்.1197)
நகைப்புக்குரியவை:
இகழ்தல், இளமை, அறியாமை, அறிந்தும் அறியாத்து போலிருத்தல்.
அழுகைக்குரியவை
: இழிவு, இழப்பு, தளர்ச்சி, வறுமை.
இளிவரலுக்குரியவ
: முதுமை, நோய், துன்பம், எளிமை.
மருட்கைக்குரியவை:
புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்.
அச்சத்திற்குரியவை
: கண்களுக்குப் புலனாகத சூர் முதலான தெய்வங்கள், கொடிய விலங்குகள், கள்வர், அரசன்.
பெருமிதத்திற்குரியவை
:கல்வி, அஞ்சாமை, புகழ், கொடை.
வெகுளிக்குரியவை
: உறுப்புகளை அறுத்தல், குடிமக்களைத் துன்புறுத்தல், வைதலும் அடித்தலும், அறிவாற்றல் புகழ் முதலானவற்றைக்
கொன்றுரைத்தல்.
உவகைக்குரியவை
: செல்வ வளம், புலமை முதிர்ச்சி, உள்ள இணைப்பு, உள்ளம் ஒத்தாரோயு கூடி விளையாடல்.
மேற்சுட்டிய 32 மெய்ப்பாடுகள் போக 32 மெய்ப்பாட்டின்
நிலைக்களன்களாக அமையும் பிறவற்றையும் நூற்பா 1206 இல் விரிவாகச் சுட்டுகிறார் தொல்காப்பியர்.
“
கண்ணாலும் செவியாலும் தெளிவாக அறிந்து உணரும் அறிவுடையார்க்கன்றி, ஆராயுமிடத்து நல்நயம்
சான்ற மெய்ப்பாட்டின் பொருள்களை எண்ணி அறிந்து கொள்ளுதல் அரிதாகும்.”
தொல்காப்பியரின்
மெய்ப்பாட்டியல் அறிவியல் அறிவு சார்ந்த வகைப்பாடுகளக் கொண்டுள்ளது என்பதை இன்றைய அறிவியல்
ஆய்வு மெய்ப்பிக்கின்றது.
அறிவியல்
நோக்கில் ஆய்வாளர்கள் அகத்தின் அழகை முகம் வெளிக்காட்டுவதை ஆறுவகையான மெய்ப்பாடுகளைச்
சுட்டுகின்றனர்., மேலும் அவை வெளிப்படும் நிலைக்களன்களை 21 எனக் கண்டறிந்துள்ளனர்..
மேலே உள்ள படத்தைக் கண்டு தெளிக.
தொல்காப்பியரின் உடலியல் உளவியல் ஆய்வுகள் இன்றும் அறிவியலுக்கு
மேம்பட்டு விளங்குவது பெரும்வியப்பாகவே உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக