சான்றோர் வாய் (மை) மொழி :
114. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்
– நப்பூதனார் – மழை.
எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு
. குறள். 355.
வலமாகச் சூழ்ந்து
எழுதல் என்றால்
என்ன …?
குணகடல்
முகந்த கொள்ளை வானம்
பணைகெழு
வேந்தர் பல்படைத் தானைத்
தோல்நிரைத்
தனைய ஆகி வலன் ஏர்பு
--கபிலர் அகநா. 278: 1 – 3
மேகங்கள் கீழ்த்திசைக் கடலிடத்து நீரை முகந்து கொண்டன ; முரசினையுடைய மன்னர்களின் பல்வகைப் படைக்கலன்களை உடைய சேனையின்கண்ணே யானைகளின் அணிவகுப்புப் போன்று தோன்றி வலமாக எழுந்து சென்றன.
வலமாக
எழ- மழை பொழிதல்
மலைமிசைக்
குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங்கு
எழிலி பெளவம் வாங்கித்
தாழ்பெயல்
பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம்
புதைப்பப் பொழிதலின் காண்வர
இருநிலங்
கவினிய ஏமுறு காலை
--மதுரை
எழுத்தாளன்,அகநா.84 : 1- 5
மலைமீது
வில் – மேகம் முழங்க – கடல் நீரை முகந்து -
உலகினை வலனாக எழுந்து- இறங்கிப் பெய்யும் மிக்க மழை – திசையெல்லாம் மறையப்
பொழிந்து நிலம் அழகுற இன்பம் எய்திய இக்காலத்தே. மழை –
பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர்பு விளங்கி
மல்குகடல் தோன்றியாங்கு .....................
--மதுரைப் பண்டவாணிகன்
இளந்தேவனார், அகநா. 298: 1 – 3
உலகில்
வாழும் உயிர்களுக்குப் பயன்மிக்க செல்வத்தைத் தரும் பலகதிர்களையுடைய ஞாயிறானது,
அவ்வுயிர்கள் விளங்குதற்கு ஏதுவாகிய பல்வகை தொழில்களைத் தருமாறு , வலமாக எழுந்து,
நீர்முக்க கடலிலே தோன்றினாற்போல. ‘
வழையமல் அடுக்கத்து வலனேர்பு ’..அகநா. 328 : 1
திருமுருகாற்றுப்படை
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு..
.
-நக்கீரர், திருமுரு.1, 2
உலகில்
வாழும் உயிர்கள் எல்லாம் மகிழும்படி, மேருவை வலமாக எழுந்து, பற்பல சமயத்தவரும்
புகழ்கின்ற ஞாயிறு கீழ்க் கடலிடத்தே எழக் கண்டாற்போன்று..
அறிவியல் நோக்கு
சூறாவளி , பூமியைப்
போல் ஒரே திசையில் சுற்றும் அடர்த்தியான, உருண்டையான நிலையற்ற
இயக்கத்தைக் கொண்ட பரப்பு என்று வானிலையியல் கூறுகிறது.[1][2]. மேலும் வானிலையியலானது சூறாவளியின் போது வட துருவத்தில் சுருண்டு
ஏறுகின்ற காற்று
இடஞ்சுழியிலும் தென் துருவத்தில் ஏறுகின்ற
காற்று வலஞ்சுழியிலும் வீசும் என்று கூறுகிறது. --- விக்கிபீடியா.
. மேகங்கள் வலமாகச்
சூழ்ந்து எழுதல் – என்ற கருத்தாவது பூமியின் நிலநடுக் கோட்டிற்குத்
தென்பகுதியில் நீர்ச்சுழற்சி, காற்றுச் சுழற்சி வலமாகச் சுழன்று எழும் என்பது இன்றைய
அறிவியல் உண்மை. இத்தகைய அறிவியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே சங்கச் சான்றோர் கண்டுபிடித்துள்ளனர் என்பது வியத்தற்குரியதன்றோ…!
சங்க இலக்கியங்களில் மழை பொழிதல் குறித்த
செய்தி பல பாடல்களில் இடம்பெற்றுள்ளன, ஓரிடத்திலாவது மழைபொழிதல்
“ வருணபகவான்” ஆற்றல் என்று சுட்டப்படவில்லை.
சங்கச்சான்றோரின் அறிவியல் அறிவாற்றலுக்கு இஃதும் ஓர் சான்றாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக