சான்றோர் வாய் (மை) மொழி :
152. அறிவியல்
சிந்தனைகள் - அறிவியல்
புரட்சி . எழுச்சியும்
வீழ்ச்சியும்.
யோகான்னசு கெப்லர் : 1571 - 1630
யோகான்னசு கெப்லர் (Johannes
Kepler, ஜோகான்னஸ் கெப்லர், டிசம்பர் 27, 1571 – நவம்பர் 15, 1630),
ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானிய)க் கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில்
முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு
சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய Astronomia nova (ஆசுட்ரோனோமியா நோவா) மற்றும் Harmonice
Mundi (ஆர்மோனிசெ முண்டி) ஆகிய
நூல்களினூடு முன்வைக்கப்பட்ட கோள்களின் இயக்க
விதிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்.
கெப்லர், கிராசு பல்கலைக் கழகத்தில் (University of
Graz) கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது
உருடோல்பு (Rudolf II) பேரரசரின் அரசவைக் கணிதவியலாளராகவும்,
செனெரல் வாலென்சுட்டைனுக்கு (General Wallenstein) அரசவைச் சோதிடராகவும் பணியாற்றியவர். இவரது தொழிலின் ஆரம்பகாலத்தில் டைக்கோ
பிராகி (Tycho Brahe) என்பவருக்கு உதவியாளராக
இருந்தார். இவர் கலிலியோ
கலிலியின் சமகாலத்தவராவார்.
இவர் சிலவேளைகளில் "முதலாவது கோட்பாட்டு வானியில்
இயற்பியலாளர்" எனக் குறிப்பிடப் படுகிறார். கார்ல் சேகன் (Carl Sagan) இவரைக் கடைசி அறிவியற் சோதிடன் எனக் குறிப்பிட்டார். (விக்கிபீடியா)
”1620 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் ஏழாம் நாளில் கெப்லரின்
தாயை, சங்கிலியாற் பிணைத்து இருட்டுச் சிறையிலே தள்ளினார்கள். அந்த தாயைச் சித்திரவதை செய்தார்கள்.
“சூனியக்காரி’ – என்ற குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். காட்டெரினா எனும் பெயர்கொண்ட
அந்த தாயை பதினான்கு மாதங்கள் சித்திரவதை செய்து சூனியக்காரி
என ஒப்புக்கொள்ள அன்னை மறுத்துவிட்டாள்,
அப்பொழுது கெப்லர் பிராக் நகரில் அரசவையில் இருந்தார்.
தாய்க்கு ஏற்பட்ட அவல நிலை அறிந்து ஓடோடி வந்தார். தனது செல்வாக்கால் தாயை விடுதலை செய்தார்.
கெப்லர் தான் எழுதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கதை உருவில்
“கனவு” எனப் பெயரிட்டு வெளியிட்டார். இக்கனவுக் கதையில் தனது தாயார் காட்டெரினாவை
ஓர் தேவதையாக உருவகப்படுத்தி, இளைஞர்களுக்கு அத்தேவதை கதை கூறுவதைப்போல்
ஆய்வுகளைப் படைத்தார். எளிய நடையில் எழுதப்பட்ட அந் நூலைக் கண்ணுற்ற
பொகீமியா மக்கள் அன்னை
காட்டெரினாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத்தொடங்கினர். இதனால்
தான் காட்டெரினாவைச் சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி சித்திரவதை செய்தனர்.
கெப்லர் வெளியிட்ட
‘கோள்களின் விதி” ஆய்வை இன்றைய விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர். அவர்
தனது முதல் வெளியீட்டில் “ கோள்கள் யாவும் சூரியனைச் சுற்றி ஓர்
நீள்வட்டப் பாதையில் செல்கின்றன என்றார்.
கெப்லர் தனது அடுத்த வெளியீட்டில் “ கோள் ஒன்று சூரியனை நெருங்கும்போது
அக்கோளின் வேகம் அதிகமாகும் என்றும் சூரியனை விடுத்துத் தூரமாக விலகிச் செல்லும்போது அக்கோளின் வேகம் குறைவுபடும்
என்றும் கூறினார். இவர்தம் அறிவாற்றல் கண்டு உலகம் வியந்தது.
………………………..தொடரும் ……………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக