தமிழமுது
–152 – தொல்தமிழர்
இசை
மரபு:
சான்றோர் ஆய்வுரை
– 12.
பேராசிரியர், முனைவர் தமிழண்ணல்.
பாட்டு வடிவமும்
உள்பொருள் உணர்வும் :
நிலைபெற்ற மானுட விழுமியங்கள்:
புறநானூற்றுப் பாடல்களிலும் அகத்திணைப் பாடல்களிலும்
மனித வாழ்வின் உச்சத்தைத் தொட்டுக்காட்டும் சிந்தனைகள் கொட்டிக்கிடக்கின்றன.
“உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்” என்ற நற்றிணைப் பாட்டு, தலைவி தரும் இன்பம் ‘நினைத்த காரியம் வெற்றியாக முடிந்தபோது
அடையும் இன்பம் போன்றது’ என்று கூறுகிறது.
“உள்ளது சிதைப்போர் உளரெனப்படார்.” ; வினையே ஆடவர்க்கு உயிரே
’ ; “காமம் செப்பாது கண்ட்து மொழிமோ, செய்வினை
முடித்த செம்மல் உள்ளமொடு, ; நில்லாமையே நிலையிற்றாகலின்”. என்பன போன்ற குறுந்தொகை
அகப்பாடலடிகள், மனித வாழ்வை உயர்த்த முயலுகின்றன,,
மனித வாழ்வை மட்டுமன்று, சிட்டுக்குருவி முதல்
யானை வரை அவற்றின் இயல்பை எடுத்துரைப்பன, கண்ணாற்கண்டது போல நடப்பியலாகக் காட்டுவனவாகும்.
சங்கப் புலவன் அடைமொழி என்ற படக்கருவியைப் பயன்படுத்தி, வண்ணப் படங்களைத் தருவதில்
வல்லவன்.
“மெய்மலி உவகை புதுப் பூங்கொன்றை
கயலேர் உண்கண் பெருங்கை வேழம்
நனைமுதிர் ஞாழல் கருவி மாமழை
மணிச்சிறைத் தும்பி
கருங்கால் வேங்கை
தொடுவளை முன்கை கருங்கோல் குறிஞ்சி
செங்காற் பல்லி செந்தார்ப் பைங்கிளி.
” இங்ஙனம் சங்கப்புலவர்கள் ‘கிளிக்’ செய்த காட்சிகள்
கணக்கற்றவை.” முளிதயிர் பிசைந்த”……எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் நல்ல குடும்பத்தைக்
காட்டுகிறது. “நீர்நீடு ஆடின் கண்ணும் சிவக்கும். ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்”
என்ற பாடல் மோகம் முப்பது நாள் என்பதை உணர்த்துகிறது. “வேம்பின் பைங்காய்” என்று தொடங்கும்
பாடல் ஆடவரின் சலனப்படும் மன மாற்றத்தை இடித்துரைக்கிறது. தோழி, தலைவன் பிரிந்து காலங்கடத்தியதால்
அவனைப் பழித்துப் பேசினாள். அதற்குக் காதலி அவர் நல்லவர், வந்துவிடுவார், நமக்கு வேண்டியவர்களுக்காகப்
படும் துன்பமே இன்பம்., அதைவிடச் சொர்க்க இன்பமும் பெரிதன்று என்று மறுமொழிகிறாள். இனத்தின் இயன்ற,
இன்னாமையினும் இனிதோ இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே” என்பது
கபிலரின் குறுந்தொகை. ………………………..தொடரும்………………….
Pl.
Donate:
R.KUMARAN,Thanjavur;
Account No: 0914101167707 ;
IFSC CODE : CNRB 0001854
; MICR CODE : 613015003.
Foreign Exchange / SWIFT Code: CNRBINBBBFD
………………………. தொடரும்…………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக