தமிழமுது
–161 – தொல்தமிழர்
இசை
மரபு:
சான்றோர் ஆய்வுரை
– 21.
தமிழிசை.
முனைவர் ராம. கெளசல்யா.
தமிழ் ஷேத்ரக்ஞர் என்று சிறப்பிக்கப்படும் கனம்கிருஷ்ணய்யர்
அழுத்தமான பதங்களை இயற்றியவர். சுப்பராமய்யர் பதங்கள் பரதநாட்டிய மேடைகளை வளப்படுத்தின.
அதனால், வள்ளலார், கோபாலகிருஷ்ண பாரதியார், மழவை
சிதம்பர பாரதி போன்றோரை நாட்டுபுறப் மெட்டுகள் கவர்ந்து அவற்றில் பாடல்கள் இயற்றி இருக்கிறார்கள்.
செவ்வியல் வடிவங்களோடு எளிமையான நாட்டுப்புற மெட்டுகளும் பாடல்களும் அமைந்த குறவஞ்சி
நாடகங்கள் முத்தமிழும் விரவப் பெற்று வரவேற்பைப் பெற்றன.
இந்தப் பாரம்பரியமே 20ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. பாரதியார்
ஆபிரகாம் பண்டிதர், கோடீசுவர அய்யர், பாபநாசம் சிவன், முத்தையா பாகவதர், மாயூரம் விசுவநாத சாஸ்திரிகள், எம்.எம். தண்டபாணி தேசிகர்,
சுத்தானந்த பாரதியார், மாரியப்ப சுவாமிகள், டி. லட்சுமண பிள்ளை, தேசிக விநாயகம் பிள்ளை,
நாமக்கல் இராமலிங்கம் பிள்ள, தஞ்சாவூர் பொன்னையா பிள்ளை, தூரன், அம்புஜம் கிருஷ்ணா,
டி. பட்டம்மாள், மதுரை என்.கிருஷ்ணன், ஜி.என். பாலசுப்பிரமணியம், கே.சி. தியாகராஜன்,
திருச்சி பரதன், கு.மா. கிருஷ்ணமூர்த்தி போன்ற ஏராளமானோர் இக்காலகட்டத்தில் சிறந்து விளங்கியோர் ஆவர்.
கோட்டீசுவர அய்யர், டி. கே. பட்டம்மாள், இருவருமே
72 மேளங்களுக்கும் கிருதிகள் இயற்றி இருக்கிறார்கள். பாபநாசம் சிவனின் பாடல்கள் திரையிலும்
இசை மேடைகளிலும் பிலபலமானவை. முத்தையா பாகவதர் புதிய ராகங்களை வடிவமைத்துப் பாடல்களை
இயற்றினார். மாயூரம் விசுவநாதசாஸ்திரி ‘திருக்குறளுக்கு இசயமைத்த பெருமைக்குரியவர்.
திருக்குறளுக்கு மெட்டமைத்து சுர தாளக்குறிப்புடன் வெளியிட்ட
முதல் நூல் மாணிக்க முதலியாரின் ‘சங்கீத சந்திரிகை’ (1902) நூலாகும் என்பது இங்கே கருதத்தக்கது. எம். எம். தண்டபானி தேசிகர் அண்ணாமலைப் பல்கலைக்கழக
வெளியீடுகளான சில இயலிசையாளர்களின் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்., தம்முடைய பாடல்களையும்
வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர்
க. பொன்னையா பிள்ளை………………………
………………தொடர்கிறது………………………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக