திருக்குறள்
– சிறப்புரை :535
முன்னுறக் காவாது
இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி
விடும். ----
௫௩௫
எதிர்காலத்தில் வரும் துன்பங்களை முன்னரே அறிந்து தன்னைக் காப்பாற்றிக்
கொள்ளத் தவறியவன், பின்னாளில் தன்பிழைகளை எண்ணி மிகவும் கவலைப்படுவான்.
“ உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு… குறுந்தொகை
முன்னோர் தேடிவைத்த செல்வத்தை
அழிப்போர் செல்வம் உடையவர் எனக் கூறப்பெறார் ; இல்லாதவரின் வறுமை பிச்சை எடுப்பதைக்
காட்டிலும் இழிவானது.
இல்லாதவரின் வறுமை...வேதனையே.
பதிலளிநீக்குவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.
பதிலளிநீக்கு